உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 171

தனித்தமிழை வெறுப்பவர் மேற்கொள்ளும் தனித்தமிழ் வாதம். வடவரை எதிர்த்துப் பேசும் வடவர் கங்காணிகளின் நயவஞ்சகக் குரல் இது!

திராவிடம்! வெள்ளைக்காரன் உபயோகித்த, உற்பத்தி செய்த பெயராயிற்றே!

வெள்ளையன் உருவாக்கிய பாரத தேசியத்தை- அவன் பிரித்த பிரிவினையை-தம் முன்னோர் வழிவழிச் சொத்தாகக் கொண்டவர் கேட்கும் மடமை வினா இது.

திராவிடம்! 'ஆரியப் பகைவன்' 'நம்' இனத்தை இழிவாகக் கருதி வசை பாடி அளித்த பெயரையா நாம் ஏற்பது? ஓடிவந்தவர், 'திருடர்,' 'திராவைகள்', 'பஞ்சைகள்' என்றல்லவா சமஸ்கிருதத்தில் அதற்குப் பொருள்? அந்தச் சொல்லைக் காதால் கேட்டாலே 'கர்ணகடூர'மாய் இருக்கிறதே!

இது, பகைவன் என்று ஆரியரைக் கூறிக் கொண்டே ஆரியர் பக்கமாக நின்று வயிறு வளர்க்கும் விபீஷணாழ்வார்கள் பேச்சு. தனித் தமிழின் உயிர் எதுவென்று அறியாத சில தனித்தமிழ்ப் பசப்பர்களை அறிவு மடமையால் ஏய்க்கும் கிளிப்பிள்ளைக் குரல் இது !

தமிழன் என்று தன் தாய்மொழிப் பெயரைச் சொல்லு! தமிழ்நாடு என்று சொல்லு! ஐக்கிய தமிழகம் என்று கூறு! அது தான் மொழி சார்ந்த தேசியம். திராவிடம் ஒரு தேசியம் ஆகுமா?

பாரத தேசியத்தை எதிர்ப்பவரையே தமிழ்ப்பற்று மூலம் தமிழருக்கெதிராகத் தூண்டிவிடும் நச்சுப் பாம்பின் நெளிவு குழைவு இது.

பாரதம் எவ்வளவு பரந்த தேசம்? பரந்த மனப்பான்மையுடன் அதை ஏற்று ஒற்றுமை வளர்த்தால் உலகில் மதிப்புப் பெறலாமே? திராவிடம் என்று ஏன் குறுக்குகிறாய்? அத்தகைய சிறு பரப்பு உலகில் வலிமையுடன் வாழ முடியுமா?

:திராவிடம் தனித்து வாழமுடியுமா ?

:வடக்கு, தெற்கு, என்று ஏன் திசை வேறுபாடு கொள்கிறாய்?