உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 173

கடல்களாகக் குவிந்து வழியும்வரை பதில் கூறிக்கொண்டே இருக்க நாம் தயங்க மாட்டோம்.

இவற்றுக்கான விளக்கம் ஒரு சொற்பொழிவாக வெளிவரலாம். ஒரு கட்டுரையாக எழுதப்படலாம். ஒரு ஏடாக, பல ஏடுகளாகப் பெருகலாம். ஒரு முழு இலக்கியமாக, இயல், கலைத்துறையாக, பல இலக்கியங்களாக, பல கலை இயல் துறைகளாக வளரலாம். ஆனால் கேள்விகள் மழையாக, சோனாமாரியாகத் திரும்பத் திரும்பக் கேட்கப்படுந்தோறும், விளக்கங்கள் வளர்ந்துகொண்டே செல்லும். சொல் விளக்கங்களாக. அவை நிற்கப்போவதில்லை. இன்றைய உலகம் கண்டு பெருமிதத்துடன் பாராட்டும் முறையில், அத்திராவிடத்தை உலகுக்கு ஒரு முன் மாதிரி நாடாக ஆகும் வரை, ரஷ்யாவுக்கு ஒரு புதிய ரஷ்யாவாக அது உலகைப் புதுவாழ்வுக்கு இட்டுச் சென்று புது உலகும் படைத்துக் காட்டி, அதில் உலக முழுவதின் ஒத்துழைப்பையும் பெறும்வரை இந்த விளக்கங்கள் நிற்கப் போவதில்லை. தாமே பதில் கூறும்வரை, திராவிட அறிவுப் படையில் முன்னணி வீரராகும் வரை நாம் புதிது புதிதாகப் பதில் கூறிக்கொண்டே இருக்கும் பண்புவளம், அறிவு வளம், மொழிவளம் கொண்டவர்கள்தாம். இவ்விளக்கமே வருங்காலத் திராவிடத்தின் புதுமலைகளாக, ஆறுகளாக, கடல்களாகக் குவிந்து வழியும்வரை பதில் கூறிக்கொண்டே இருக்க நாம் தயங்க மாட்டோம். இவற்றுக்கான விளக்கம் ஒரு சொற்பொழிவாக வெளிவரலாம். ஒரு கட்டுரையாக எழுதப்படலாம். ஒரு ஏடாக, பல ஏடுகளாகப் பெருகலாம். ஒரு முழு இலக்கியமாக, இயல், கலைத்துறையாக, பல இலக்கியங்களாக, பல கலை இயல் துறைகளாக வளரலாம். ஆனால் கேள்விகள் மழையாக, சோனாமாரியாகத் திரும்பத் திரும்பக் கேட்கப்படுந்தோறும், விளக்கங்கள் வளர்ந்துகொண்டே செல்லும். சொல் விளக்கங்களாக. அவை நிற்கப்போவதில்லை. இன்றைய உலகம் கண்டு பெருமிதத்துடன் பாராட்டும் முறையில், அத்திராவிடத்தை உலகுக்கு ஒரு முன் மாதிரி நாடாக ஆகும் வரை, ரஷ்யாவுக்கு ஒரு புதிய ரஷ்யாவாக அது உலகைப் புதுவாழ்வுக்கு இட்டுச் சென்று புது உலகும் படைத்துக் காட்டி, அதில் உலக முழுவதின் ஒத்துழைப்பையும் பெறும்வரை இந்த விளக்கங்கள் நிற்கப் போவதில்லை.

சொல் விளக்கம், வரலாற்று விளக்கம், அறிவு விளக்கம், பண்பாட்டு விளக்கம், செயல் விளக்கம், வாழ்வு விளக்கம் என அத்தனை விளக்கங்களையும் தரவல்ல இளைஞர் நங்கையரின் அறிவுப் பட்டாளம், செயல் வீரர் வரிசை, கலைஞர் குழாங்கள் நம் பின்னே சடை வரிசையில், சங்கிலி வரிசையில் அணிஅணியாக நின்று துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். உலகம் விரைவில் அறிய இருக்கிறது! வருங்கால உலகம் அதனால் வளம் பெற இருக்கிறது!

திராவிட இயக்கம் திராவிடத்தின் சொத்துமட்டுமன்று. வருங்கால உலகிற்குக் கிடைக்க இருக்கும் பெரும் புதையல்.