உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 177

முடியாது. ஏனெனில் அதைக் கனவுகண்டு, அதற்கான திட்டங்களைத் தன் தேசியத்தில் உருவாக்கிய தமிழினமே அதைத் திறம்பட இயக்கமுடியும். தமிழன் சார்பில், திராவிடத்தின் சார்பில் வடதிசை ஏகாதிபத்தியம் இருந்தால், அது தமிழன் உரிமையைமட்டும் அழிப்பதாயிராது. தமிழினப்பண்பாகிய ஓருலகப் பண்பையும் குடியாட்சிப் பண்பையும் சமதருமப் பண்பையும் உலகில் படிப்படியாக ஒழிப்பதாகவே இயங்கமுடியும். ஏனெனில் வருணாசிரம தரும நெறியில் ஊறிய அதன் அறிவு எல்லாவற்றையும் அந்த உயர்வுதாழ்வு வேறுபாட்டுருவிலேயே காணமுடியும், பேணமுடியும், வளர்க்க முடியும்.

அது இலக்கணத்தில், எழுத்தில் பல வகைகளில் வருணாசிரமம் கண்டு அதைத் தமிழிலும் மற்றத் தாய்மொழிகளிலும் புகுத்திய இனம். வானநூலில் கோளினங்கள் அல்லது கிரகங்களிடையே ஆண் பெண் பேதம், ஆண் பெண் அலி பேதம், சாதிபேதம், வருணாசிரம பேதம், இனபேதம் ஆராய்ந்து காணும் அறிவுடைய உலக இனம் வேறு எதுவும் கிடையாது. இதுமட்டுமோ? அது கடவுளைப் பலராகக் கொள்வதுடன் அமைதிகொள்ளாமல் அவர்களிடமும் ஆண் பெண் வேற்றுமை, சாதி வருணாசிரம வேற்றுமை, இனவேற்றுமை வகுத்துள்ளது. கடவுளரிடம்கூட அரசர், புரோகிதர் உண்டு. காமுகர், தாசிகள் உண்டு. கயவர், குறும்பர் உண்டு.


தமிழில் நான்கு வகைப் பாக்கள் உண்டு. பாவினங்கள் உண்டு. இந்த எண்ணிக்கையைக் கண்டவுடனே வருணாசிரமக் கற்பனை வேலை செய்து விட்டது. வெண்பா பிராமணப் பாவாம், ஆசிரியப்பா க்ஷத்திரியம்; கலிப்பா வைசியம்; வஞ்சிப்பா சூத்திரப் பாவாம்! நாயன்மார், ஆழ்வார்கள், கம்பர் முதலிய இடைக்காலப் புலவர்கள் பெரிதும் பயன்படுத்திய விருத்தம் பாவினமே. அது தாழ்த்தப்பட்ட இனப்பா, ஆதித்திராவிடப்பா. பாரதி பாரதிதாசன் புதிய பாக்களுக்கு இனி இடம் தேடவேண்டும். பாரத ஆட்சி அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடும்- அவை சண்டாளப் பாக்கள் என்று கருதப்படத்தகும்.

எழுத்தில் உயிர் பிராமண எழுத்து; வல்லெழுத்து க்ஷத்திரிய எழுத்து - அப்பப்பா ! இது பிற்காலத் தமிழ் இலக்கண