உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. பிரிவினையல்ல சுதந்திரம்

திராவிட நாட்டுப் பிரிவினை என்பதிலுள்ள 'பிரிவினை' என்ற சொல்லை வாய்ப்பாக வைத்துக்கொண்டு பாரத பக்தர்கள் பகடையாடுகிறார்கள். பிரிவினைக்கு எதிரான சொல் ஒருமை என்பது அவர்கள் அறியாததல்ல; ஆனால், பிரிவினை வேண்டாம், ஒருமையே வேண்டும் என்று அவர்கள் கூறமாட்டார்கள். வேற்றுமை வேண்டாம், ஒற்றுமை வேண்டும் என்றுகூடக் கூற மாட்டார்கள். பிரிவினை வேண்டாம். ஒற்றுமை வேண்டும் என்று பரப்புவார்கள். அவர்கள் விரும்பும் ஒற்றுமை, அதாவது ஒருமை, வேற்றுமையற்ற, சமத்துவமுடைய ஒருமைகூட அல்ல; வடக்குத் தெற்கு வேற்றுமை உடையது அது என்பதை அவர்கள் ஒற்றுமை என்ற சொல்லால் மறைத்துக் கூறவே விரும்புகிறார்கள். உரிமை வடக்கே, கடமை தெற்கே; ஆளுவது வடக்கு, ஆளப்படுவது தெற்கு -இதுவே அவர்கள் உள்ளத்தில் எண்ணும் ஒற்றுமையின் உருவம், 'நீயும் நானும் ஒண்ணு, உன் வாயில் மண்ணு, என் வாயில், சர்க்கரை' என்று சிறுவர் சிறுமியர் விளையாட்டாகக் கூறும் ஒற்றுமையே அவர்கள் திராவிடருக்கு ஆசை காட்டி அளிக்க விரும்பும் ஒற்றுமை!

திராவிட நாட்டுப் பிரிவினை என்ற தொடரில், பிரிவினை என்ற சொல் தேசியத்துக்கு எதிரான பிரிவினை என்ற பொருளில் வழங்கப்படவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியப் பிரிவினையையே அது குறித்துக் காட்டுகிறது. பிரிவினை வேண்டாமென்பவர்கள் தேசத் துரோகிகள், ஏகாதிபத்திய வாதிகள்.பிரிவினை வேண்டுமென்பவர்கள்தாம் உண்மை உயிர்த் தேசியவாதிகள். ஆனால், இந்தப் புண்ணிய பூமியில் நச்சுப் பாம்பு நல்ல பாம்பு என்று அழைக்கப்படுவது போல, பல கடவுள்களை நம்புபவர்கள் மட்டுமே அன்பில்லாதவர்கள், சாதி வேறுபாடு காட்டுபவர்கள் தாம் கடவுளுக்கும் வேதங்களும் சொந்தமான