உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17. சுதந்தர தேசியங்களின்

பிரிவினை இலட்சியம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து முதன்முதல் பிரிவுற்ற நாடுகள் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு வெளியேயுள்ள கனடா, தென் ஆப்பிரிக்கா கூட்டுறவு, ஆஸ்திரேலியா ஆகிய வெள்ளையர் குடியேற்றப் பகுதிகளே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இதன் பின்னரே பொதுவரசுக் காப்பகம் (Common Wealth and Protecorate) ஆயிற்று. ஆனால், தனியுரிமை (Dominion Status) பெற்ற குடியேற்றங்கள் மட்டுமே பொதுவரசு என்ற சொல்லால் குறிக்கப்பட்டன. இந்திய ஏகாதிபத்தியப் பகுதியோ காப்பகம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது. காப்பரசின் உறுப்புகள் சார்பரசுகள் (DEPENDENCIES) என்று வழங்கப்பட்டன. இந்த இந்திய ஏகாதிபத்திய உறுப்புக்களிலும் முதன்முதல் வெள்ளையர் ஆட்சியிலேயே பிரிந்தவை ஏடனும் இலங்கையும் மலாயாவும் சிங்கப்பூருமே. இப்பிரிவினைகள்தாம் அவற்றின் சுதந்தரத்துக்கு வழி வகுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்த சுதந்தர நாடுகளெல்லாம் போக, எஞ்சியுள்ள சுதந்தரம் பெறாத பகுதிகள்கூட ஒரு தேசிய இனப் பரப்பல்ல என்பதை ‘இந்தியக் கூட்டுறவு’ (Indian Union) என்ற அதன் பெயரே சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ்காரர்களே பிரிட்டிஷார் விலகிய சமயம் அதை ஒரு தேசியக் கூட்டுறவு என்றுதான் கருதினர். ஒவ்வொரு பெரிய மாகாணமும் ஒரு தேசிய இனம் என்றே அவர்கள் கருதினர். டுதலை இயக்கமாக நிலவிய அக்காலக் காங்கிரஸ்காரர் உள்ளப் பாங்கைச் சரிவரக் குறிப்பதானால், அவர்கள் தேசிய இனங்கள் என்று குறித்தது பிரிட்டிஷ் ஆட்சிக் கால மாகாணங் களையல்ல - அவை தேசிய அடிப்படையில் அமையவில்லை யாதலால், காங்கிரஸ் அமைப்பு, மொழி அடிப்படையிலேயே