உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

193

மாகாணங்களைத் தேசிய இனங்களாக வகுத்துக் கொண்டி ருந்தது. ஆனால், விடுதலை இயக்கத் தின்போது கனவு கண்ட இந்த உண்மைத் தேசியம் இன்றைய ஏக இந்தியாவில் கைவிடப்பட்டுள்ளது. மொழியடிப்படையாக மாகாணம் வகுப்பதில் - தமிழகம், கன்னடம் ஆகியவற்றுக்கு மொழிப் பெயர் தருவதில் கூட -அவர்கள் தயக்கமும் மறுப்பும் காட்டுகின்றனர். அத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியில் மாகாணங் களுக்கிருந்த தன்னாட்சி, மாகாண சுய ஆட்சி உரிமையும் இப் போது பறிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தேசியக் கூட்டுறவு பெயரளவில்தான் இன்று தேசியக் கூட்டுறவாக அழைக்கப் படுகிறது. அது தேசிய உரிமைகளைக் காலடியிலிட்டு நசுக்கும் பிற்போக்கான கோரமான ஓர் ஏகாதிபத்தியமே என்பதை இவை காட்டுகின்றன.மாகாணங்கள் நாட்டாண்மைக் கழகங்கள் ஆக்கப் பட்டு, மைய ஆட்சி இன்று சர்வாதிகாரம் செலுத்துகின்றது.

பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கத்தில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக, ஒரு முழு மாகாணமாகக் கூட அல்ல, சென்னை மாகாணத் தலைவர் கீழுள்ள ஒரு பெரிய மாவட்டமாகவே அமைந்திருந்தது. இலங்கைக்கு அன்று ஏற்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை பிரிந்த பிறகு இன்னும் தனி அமைப்பாக இயங்குகிறது. இந்திய ஏகாதிபத்திய அம்சமாக முதலில் இருந்த அந்நாடு இடைக்காலத்திலேயே பிரிந்து, ஏகாதிபத்தியம் சுதந்தர மடைந்தபோதே சுதந்தரம் அடைந்தது.

காங்கிரஸ் இயக்கம் ஏற்பட்ட காலத்தில் இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகப் பர்மாவும் இயங்கிற்று. மற்ற மாகாணங்களுக்கு மாகாணக் காங்கிரஸ் இயங்கிவந்ததைப் போலவே பர்மாவுக்கும் ஒரு மாகாணக் காங்கிரஸ் (பர்மிய மாகாணக் காங்கிரஸ்) இருந்துவந்தது. பிரிந்துவிட்ட பாகிஸ்தானில் இன்னும் காங்கிரஸ் கட்சி வெளிநாட்டுக் கட்சியாய் இயங்குவதுபோன்றே, பர்மாவில் அது இன்னும் இயங்குகிறது, இந்திய தேசியம் வலுப் பெற்ற காலத்தில் பர்மியர் தாம் இந்திய தேசியத்தின் ஒரு மாகாணமல்ல, தனித் தேசியம் என்பதை உணர்ந்து பிரிவினை கோரினர். பாகிஸ்தானை எதிர்த்ததுபோலவே, இப்போது திராவிட நாட்டை எதிர்ப்பது போல, காங்கிரஸ் அதை முழு மூச்சாக எதிர்க்கவே செய்தது.