உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

(203

விசயநகரப் பேரரசர் காலத்தில் தெலுங்கரும் கன்னடியரும் இதுபோலவே தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர்.

சென்ற நானூறு ஆண்டுகளுக்குள் தென்னகத்துக்கு உள்ளிருந் தும் அதன் எல்லையிலிருந்தும் தமிழகம் புகுந்த இவ் வினத்தவர் தத்தம் தாயகத்தில் வாழும் பழைய உறவினரைவிடச் செல்வத்திலும் கல்வியிலும் வாழ்க்கை வளத்திலும் மேம்பட்டவர் களாக, தமிழகத்தின் வாழ்வில் வளமான பங்கு கொள்பவர் களாகவே உள்ளனர். அவர்களில் பலர் தமிழுக்காகப் பாடுபட தமிழ்ப் புலமையிலும் ஆராய்ச்சியிலும் மேம்பட, தமிழுக்காகப் போராடக் கூடத் தயங்கியதில்லை. முதல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் இத்தகையோர் பலர் தலைமையே வகித்துத் தமிழ்த் தியாகிகளாயினர்.

-"

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர், உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டவர், வங்கத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் கூடத் தமிழகத்தில் உண்டு. இந்தி ஒழிப்பியக்கத்தில், அயல் ஆதிக்க மொழியாக வந்த தம் தாய் மொழியாகிய இந்தியை எதிர்த்து இவர்களில் சிலர் சிறை வாழ்வுரை ஏற்றுள்ளனர்.

சேர சோழ பாண்டியர் ஆட்சியில் அராபியரும், யூதரும் சிரிய மக்களும் பல்வேறு காரணங்களால் தென்னகக் கரையோரமெங்கும், கோவா முதல் காயல்பட்டினம் வரை பரவலாக வந்து குடியேறினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுபிரான் வாழ்ந்த காலத்திலேயே - அவர் சீடர் தூய திருதாமசுடன் யூத சிரிய மக்கள் வந்து தம் சமயம் பரப்பிக் கோயில் குளம் கட்டி வாழ்ந்து வந்துள்ளனர். சென்னை யருகிலுள்ள பறங்கிமலை இந்தத் தூய தாமஸ் பெயரால் இயங்குவதுடன், சென்னையின் தலைசிறந்த அரச பாட்டையும் (மவுண்டு ரோடு) அப் பெயராலேயே வழங்குகிறது. சேர அரசர்

ந்த யூத, சிரிய மக்களுக்குத் தனியுரிமைப் பட்டயங்கள் வழங்கியதன் பயனாக, இன்றளவும் சமயம் ஒன்றால் மட்டும் தனியுரிமையுடைய சிரிய கிறித்துவர்களாகவும், அஞ்சுவன்னத் தார் என்னும் பெயருடன் இஸ்லாமியர்களாகவும், மரக்காயர் அல்லது மரக்கலாயர் என்ற மதிப்பு வாய்ந்த சிறப்புப்பெயருடன் தமிழ் வணிகர்களாகவும், சீதக்காதி போன்ற தமிழ்ப்