உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(204)

அப்பாத்துரையம் - 11

புரவலர்களாகவும், வள்ளல்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பாண்டிய அரசியற் போர்வை யிலேயே அராபியக் குடியேற்றத்தாரின் பேராளராக (பிரதி நிதிகளாக) அரேபியரே இடம் பெற்று, அமைச்ச ரவையிலே ஆய்வுரையாளராகச் சிறந்து உரிமையுடன் விளங்கினர் என்று அறிகின்றோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் வந்த இந்த அயலினத்தாரில் பலர் எவ்வகையிலும் தமிழரிடமிருந்து பிரித்தறிய முடியாதவராகத் தமிழராகிவிட்டதன் மருமம் என்ன? சிலர் தம் பழைய மொழி, சமயம், பழக்க வழக்கங்கள் ஆகிய சின்னங்களை ன்றும் பேணி வந்தாலும், தாம் அயலா

ரன்பதையே மறந்து, தமிழராக வாழ்வதன் மறை திறவுதான் என்ன? பலர் தம் பழைய தாயகத்தை அயலினமாகக் கருதுமளவுக்கு, அவர்களால்கூட அவ்வாறு கருதப்படுமளவுக்குத் தமிழ் வாழ்வுடன் எப்படி ஒன்று பட்டார்கள்?

எல்லா இனங்களுக்கும் தமிழர் இடம் தந்ததுடன் நில்லாது அவரவர்களுக்கு முழுச் சமத்துவ உரிமை, இனப் பாதுகாப்பு, மொழிப் பாதுகாப்பு, உரிமைகள், குடியாட்சி உரிமைகள் வழங் கியதே இப்பொன்னார் நிலைக்குக் காரணம் என்று காண்டல் அரிதன்று.

தமிழகத்திலுள்ள தெலுங்கர் தமிழ் மொழியை மட்டும் வளர்த்தவர்கள் அல்ல. தொலைத்தாய் இனமான ஆந்திரத்தின் இலக்கியத்திலும் அவர்கள் கொண்ட பங்கு சிறிதல்ல. தம் காலத் தமிழர் வரலாற்றை, தமிழகக் கலைவளங்களை அவர்கள் தெலுங்கில் எழுதி ஆந்திர வாழ்வையும் வளப்படுத்தியுள்ளனர். ஆந்திர மொழியில் 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையுள்ள நாடகப் பேரிலக்கியம், உரைநடைப் பேரிலக்கியம் கிட்டத்தட்ட முழுவதும் தமிழகத் தெலுங்கர் தமிழர் வாழ்வுபற்றித் தெலுங்கில் எழுதியவையேயாகும். தியாகராயர் வளர்த்த தமிழிசை ஆதரவற்றுத் தளர்ந்து அழிந்து வந்த தமிழிசைக் கலையின் தெலுங்கு உருவமேயாகும். தவிர, ஆந்திர முன்னோர், உறவினர் வாழ்வின் வளத்தை விட, உயர்வை விடத் தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வளமும் அறிவும் சிறந்தவர்களாகவே, இன்றளவும்