உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(232)

அப்பாத்துரையம் - 11

ஆரிய இனத்தவர்தாம் ஜெர்மானியர், ஆங்கிலேயர். ஆரிய இனத்தவர்தாம் உலகாண்ட உரோமர், மேலை உலகுக்கே நாகரிகம் அளித்த கிரேக்கர். ஆனால், ‘ஆரியம்' அங்கே கிடையாது. ஆரியர் வாழ்ந்த நாடுகளில் ஒரே ஒரு நாட்டில்தான் ஆரியர் ‘ஆரியம்’ படைத்தனர். அதுவே திராவிட நாடு.திராவிட நாட்டை வளர்ப்புப் பண்ணையாகக் கொண்டு வளர்த்த ஆரியம்தான் இந்தியாவிலே, ஆசியாவிலே ஆரியம் என்ற பெயரால் ஒரு போலி நாகரிகம் பரப்பிற்று; பரப்பி வருகிறது. அந்தப் போலி நாகரிகம்தான் உலகாண்ட செங்கிஸ்கான் மரபை, கைரஸ் மரபை, புத்தர் அசோகன் மரபை அழித்து 'கீழ்' திசையை அடிமைத் திசையாக்கியுள்ளது.

இன வேறுபாடற்ற மேலை யுலக நாகரிகமும் அதேபோல இன வேறுபாடற்ற திராவிட நாகரிகமும் 'இனம்' என்ற சொல்லையே உலகில் உயர்த்திய இனங்கள், நாகரிகங்கள். அந்தப் பொருளில் 'இனம்' என்ற சொல்லை ஆக்க முறையில் பயன்படுத்தித்தான் திராவிட இயக்கம் இனத் தேசியம் பேசுகிறதே தவிர, ஆரியச் சார்பாளர் உள்ளத்தில் படரும் கீழ்த்தரப் பொருளுடைய சொல்லைப் பயன்படுத்தி அது பேசவில்லை.

'ஆரியமாவது, திராவிடமாவது' என்று பேசுபவர் வரலாறறியாதவர் மட்டுமல்ல. வரலாறறிந்த பின்னும் இந்தப் பண்பு வேறுபாடறிய முடியாதவர்களே யாவர்.

யார் திராவிடர், யார் ஆரியர் என்று இன்று கூற முடியாமலிருக்கலாம்; கூற முடியலாம். ஆனால், யார் திராவிடப் பண்புடையவர், ஆரியப் பண்புடையவர் என்று கூறுவது எளிது, மிக மிக எளிது. ஏனெனில், ஆரியப் பண்பாடு போற்றும் வருணா சிரம தருமம் ஆரிய திராவிட வேறுபாட்டை, வேற்றுமையை, உயர்வு தாழ்வடிப்படையில், 'நித்திய முதலாளித்துவ அடிப்படையில், சுரண்டல் அநீதி அடிப்படையில் உலகில் என்றென்றும் நிலை நிறுத்துவதேயாகும். அதை என்றென்றும் நிலைநிறுத்துவதற்காகவே அதற்கு அணிமைக்காலப் பெரியார்கள் சிலர் பழைய உபநிடத வாசகமொன்றுக்குப் புது வழக்கும் புதுப் பொருளும் அளித்துச் சனாதன தர்மம் - கடவுளைப்போல நித்தியமான, அனாதியான இயற்கைமுறை