உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26. தீமைகளின் கோவையே ‘ஆரியம்’

ஆரியம் உலகில் வாழ்வதற்கு, வளர்வதற்குரிய ஒரே கார ணம், அது எல்லா வகைத் தன்னலங்கள், பொய்மைகள், வஞ்சகங்கள் ஆகியவற்றுக்கும் தாராளச் சலுகை தந்து வஞ்சகக் கோட்டையாக நிலவுவதுதான். ஆனால், அதே சமயம் அது ஆயிரக்கணக்கான ஆண்டு நிலவுவது உலக அதிசயங்களிலேயும் விசித்திரமான ஓர் அதிசயம்தான். சிந்திக்கும் பண்பு எங்கு வளர்ந்தாலும் அங்கே அது நிலவ முடியாது. ஏனெனில், அது ஒருவர் இருவரை, ஒரு குழுவை மட்டும் வஞ்சிப்பதன்று. திருடர் எல்லார் வீட்டிலும் திருடுவர். தம் வீட்டில் திருடமாட்டார். ஆரியமோ எல்லாரையும் வஞ்சிக்கும். தன்னையும் விட்டு வைக்காது. திருடர் வீட்டிலும் திருடும். வஞ்சகரையும் வஞ்சிக்கும் முக்கால உணர்வுடையவர் என்று கூறும் எந்த முனிவராவது பிராமணராவது சிறிது தொலைநோக்குடன் சிந்தித்திருந்தால் இந்த ஆரியம் ஒரு கணம்கூட நிலவியிருக்க முடியாது. ஆனால், கணக்குப் பிள்ளையை மாற்றிக்கொண்டே வரும் கள்ள மார்க்கட்டுக்காரரைப்போல, ஆரியம் எந்த ஆரியரையும்கூட நம்புவதில்லை. வடநாட்டுப் பிராமணரிடம் அது தென்னாட்டுப் பிராம மணரெல்லாம் சண்டாளர் என்றும் தென்னாட்டுப் பிராமணரிடம் ‘வட நாட்டிலுள்ள பிராமணரிடம் நெருங்காதே, அவர்கள் ஆசாரம் கெட்டவர்கள், மீன் தின்பவர்கள்' என்றும் அது கூறுகிறது.பிராமண ஆணிடம் பெண்ணை நம்பாதே என்று போதிக்கிறது.பிராமணப் பெண்ணிடம் அது வேறு தொனியில் பேசுகிறது. 'ஆடவன் காரியத்தில் தலையிடாதே, உன் புத்தியைப் பயன்படுத்திக்கொள். அவன் போக்கில் அவனை விட்டு, அவன் சொற்படி நடந்தால், உனக்குக் கேடொன்றும் வராது, குறைவராது. உன் தர்மம் உனக்கு இகத்திலும் பரத்திலும் எல்லாம் தரும்' என்று புராண இதிகாச மொழியில் கூறியிருக்கிறது.