உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234) ||— —

அப்பாத்துரையம் - 11

மேலையுலகிலுள்ள இன வேறுபாடுகளுக்கு எந்த மதத்தின் ஆதரவும் கிடையாது. துரதிருஷ்டவசமாக வெள்ளையரோ, நீகிரோவரோ, எவராவது 'பாழாய்ப் போன இந்து மதம் சேர்ந்தாலல்லாமல் அந்த நிலை ஏற்படவும், செய்யாது; கிறித்துவ, இஸ்லாமிய சமயங்கள் அவ்வேறுபாடுகளை, உயர்வு தாழ்வு அநீதிகளை அகற்ற முடியாமல் இருக்கலாம். அகற்ற முடியாமல் பேசாதிருந்து உடந்தையாகக்கூட அமையலாம். ஆனால், இந்தியத் துணைக் கண்டத்திலுள்ளபடி உயர்வு தாழ்வு வேறுபாடு கடவுளால் அமைக்கப்பட்டது என்று கூறும் நிலை - சாத்திர சம்பிரதாயங்களால் அரண் செய்து காப்பாற்றப்படும் நிலை இல்லை. உலகின் எந்தச் சமயத்திலும் இல்லை. எந்த நாட்டிலும் மேலோரால், சுற்றறிந்தவரால், ஆராய்ச்சித்திற மிக்கவர்களால், சட்டமறிந்து சட்டம் இயற்றுபவர்களால் இவை பேணி வளர்க்கப்படும் நிலை - இந்தப் பாரத புண்ணிய பூமியைத் தவிர வேறு எந்தத் திருநாட்டிலும் இருக்க முடியாது! வேறு எந்த நாட்டிலும், அறவோர் இதைத் தெய்விக அமைப்பு என்று வாதாடவும் முடியாது.

கிறித்துவ இஸ்லாமியர் மரபுப்படி கடவுளுக்கு எதிரியான ஒருபேய் மகன் அல்லது சைத்தானே ஓரவதாரமெடுத்து ஒருமதம் உண்டு பண்ணினால் கூட, அது வருணாசிரம சனாதன இந்து மதத்தளவு அறிவுத் துணிவுடனும், கட்டுப்பாட்டுடனும் உயர்வு தாழ்வு அநீதியைத் தெய்வ நீதியாக்கி அதற்கு விளக்கம், விளக்க வேதாந்தம் கூறுமென்று கூற முடியாது. ஆனாலும் இந்தியாவில் ஆரிய மரபில் தேவர், முனிவர், அவதார புருடர், அருளாளர்கள் முதற்கொண்டு அவ்வாறு விளக்க முன்வந்துள்ளனர், வருகின்றனர்! சைத்தானே கடவுளுருவாகக் காட்சி தரும் இதுபோன்றதொரு துணைக் கண்டம் கடவுட் படைப்பில் வேறு கிடையாது! இதனால்தானோ என்னவோ இந்தத் துணைக் கண்டத்தைப் புண்ணிய பூமி, போக பூமி என்று புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன - யாருக்குப் புண்ணியமோ, யாருக்குப் போகமோ, அதை அந்தக் கடவுள்தான் அல்லது அந்தச் சைத்தான்தான் உணர வேண்டும்!

-

வருணாசிரம தருமம் இத்துணைக் கண்டத்தில் அறிவை, பண்பை எந்த அளவு கறைப்படுத்தியுள்ளது என்பதை அளந்து பார்க்க வேண்டுமானால், காந்தியடிகள், இராமகிருஷ்ணர்,