உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28. 'தமிழ்' தமிழர்

தேசியப் போராட்டம் பயன்படாது!

ஆசிரியர் மறைமலையடிகள் தனித்தமிழுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் விளக்கம் தந்தபோது, மறைமலையடிகள் உள்ளத்தையே அவர் படம் பிடித்துக் காட்டினார். 'தனித் தமிழ் என்றால் என்ன? தமிழ் இன்று தமிழும் ஆரியமும் கலந்த புதுத் தமிழாகி வருகிறது புதுத் தமிழாய் அது வளர்கிறதா என்றால், இல்லை, தேய்கிறது. இந்த தேயும் தமிழை நிறை தமிழாக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? கூட்டிய கேட் டைக் குறைக்க வேண்டும். நம் பள்ளிப் பிள்ளைகள் கண ணக்குப் போடும் முறையில் கூறினால்,

தமிழ் - ஆரியம் = திராவிடம்.

திராவிடம் என்றால் என்ன என்பதற்கு இது ஒரு நல்ல விளக்கம். ஆனால், இதைப் பார்க்கிற குதர்க்கவாதி எவனேனும் கூறக்கூடும்- ‘குறைக்கிறீர்களே, தேய்கிறதே' என்று!

'தமிழ் = ஆரியம் x புதுத் தமிழ்

என்று கூறுங்களேன், இதுவல்லவா வளர்ச்சி' என்று அவர்கள், குழம்பும் அரைப் படிப்பாளர்களைக் குளறுபடி செய்ய எண்ணக் கூடும். ஆனால், அவர்களுக்கு நாம் கூறுவதெல்லாம், கணக்கு முறையிலிருந்து இயல் நூல் (விஞ்ஞானம்) சென்று பாருங்கள்; தமிழ், கலப்பால் கெட்ட வகையை அது காட்டும் என்பதே.

இரும்பு = உயிர்வளி X துரு.

துரு - உயிர்வளி = இரும்பு.

பண்டைத் தமிழ் உண்மை இரும்பு, தம்பி! இன்றைய தமிழ் அதனுடன் உயிர்வளி கலந்த புது இரும்பு, துரு!