உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. பல்லவ பாண்டியப் பேரரசுகள்
(கி.பி.3-9ஆம் நூற்றாண்டுகள்)

தென்னாட்டின் வரலாற்றில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ஒரு முனைப்பான திரும்பு கட்டம் ஆகும். நாகரிகம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் அது மிகப் பெரிய மாறுபாடுகளை உண்டுபண்ணிற்று.

இம்மாறுபாடுகளின் மூலகாரணத்தை நாம் முற்றிலும் தென்னாட்டிலேயே காணமுடியாது. அவற்றைத் தென்னாட்டின் வடக்கிலுள்ள சிந்து கங்கை சமவெளியிலும், அதற்கு அப்பாலுள்ள நாடு ஆசியப் பகுதியிலுமே சென்று காண்டல் வேண்டும்.

களப்பிரர் படையெழுச்சி

கி.மு. 1500 வரை சிந்து கங்கைவெளி தென்னாட்டு நாகரிகத்தின் ஓர்புறச் சிறை வாரமாகவே இருந்து வந்தது. ஆனால், ஆரியர் குடியெழுச்சிக்கால முதல் ஆயிர ஆண்டுகளாக அயலார் படையெடுப்பாலும் அயலார் கலப்பாலும் சிந்துவெளி பேரளவிலும் கங்கைவெளி ஓரளவிலும் சின்னாபின்னமடைந்தே வந்தன. கி.மு.2-ஆம் நூற்றாண்டிலிருந்து மீண்டும் பேரளவில் பண்படா முரட்டு மக்கள் இனங்கள் புடைபெயரத் தொடங்கின. மங்கோலியர், யூச்சி என்ற இனத்தவரை வடக்கிலிருந்து நெருக்க, அவர்கள் ஊணரையும், ஊணர் குஷாணரையும், குஷாணர் சகரையும் முறையே தெற்கு நோக்கி நெருக்கித்தள்ளினர்.

ஆந்திரப் பேரரசர் குஷாணரையும் சகரையும் கிழக்கே கங்கைவெளிலும் தெற்கே தென்னாட்டிலும் பரவாமல்தடுக்கப் பெருமுயற்சிகள் செய்தனர். சேரன் செங்குட்டுவன் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கைவெளிவரை படைநடத்தி, ஆந்திரப்