உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 அப்பாத்துரையம் - 11

பல்லவர்களை எதிர்த்து வனவாசியில் தம் ஆட்சி நிறுவினர். கிளை ஆந்திர மரபினரான சூடு சதகர்ணிகளை விழுங்கி அவர்கள் விரைந்து வளர்ந்தனர். முதல் அரசன் மயூரவர்மனைப் பின்பற்றி எழு தலைமுறைகளாக ஒன்பது அல்லது பத்து அரசர் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசியாலும், கீர்த்திவர்மனாலும் அவர்கள் ஆண்ட பகுதி வனவாசி பன்னீராயிரம் என வழங்கப்படுகிறது.

மேலைக்கங்கர்

மேலைக்கங்கர் ஆண்ட பகுதி கிழக்கு மைசூரும் அனந்தப் பூரும் ஆகும். இது நெடுங்காலம் கங்கதாடி தொண்ணூற்றாறாயிரம் என வழங்கிற்று. கங்க மரபினர் பெர்மானடி, கொங்குணிவர்மர் என்ற பட்டங்களை மேற்கொண்டனர். ஐந்தாம் நூற்றாண்டுவரை அவர்கள் குறுநில மன்னராகவே இருந்தனர். கி.கி.450-ல் பாணர்களை ஒடுக்குவதற்காகவே பல்லவன் சிம்மவர்மனால் அவர்கள் முடியுரிமை அளிக்கப்பட்டனர். ஆனால், அந்நூற்றாண்டிலேயே கடம்பர்களாலும் 6-7ஆம் நூற்றாண்டுகளில் சாளுக்கியர்களாலும் அவர்கள் கீழடக்கப்பட்டு அவர்கள் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். ஆயினும் சிற்றரசர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர்.

7ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர் இராஷ்டிரகூடரால் அடக்கப்பட்டபின், கங்கர் தன்னாட்சி பெற்றனர்.

805 முதல் 810 வரை ஆண்ட இரண்டாம் சிவமாரன் இராஷ்டிரகூட அரசன் துருவனால் வீழ்த்தப்பட்டு, மூன்றாம் கோவிந்தனால் மீண்டும் அரசுரிமை வழங்கப்பட்டான். அடுத்த அரசன் விஜயாதித்தியன் (810-840) கிழக்குச் சாளுக்கியருடனும், அவன் பின்னர் வந்த முதலாம் பிருதிவீபதி வரகுண பாண்டியனுடனும் திருப்புறம்பயத்தில் போர் புரிந்தனர். திருப்புறம்பயப் போரில் பிருதிவீபதி உயிரிழந்தான்.

9,10ஆம் நூற்றாண்டுகளில் கங்கர் மீண்டும் சோழருக்கும் இராஷ்டிரகூட அரசர்களுக்கும் கீழடங்கியவர்களாக இருந்து, அப்பேரரசர்களிடையே போரில் எதிரிகளைத் தாக்கும் கருவிகளாக இருந்து வாழ்ந்தனர். இவ்வகையில் இரண்டாம் பிருதிவீபதி (900-940) முதலாம் பராந்தக சோழனின் ஆளாய்,