உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

195

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத் தோடியதனால் அகமது நகர் முற்றுகையில் வெற்றி பெறாமலே மீள வேண்டி வந்தது. இதே சமயம் ஆதில்ஷாவின் தாக்குதலால் பல தொல்லைகளுக்காளாய் இப்ராகீம் குதுப்ஷா குற்றுயிரும் குலையுயிருமாகவே தலைநகர் அணுக நேர்ந்தது. ஆனால் தலைநகரமும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் அவனுக்குத் தஞ்சமளிக்கும் இடங்களாய் அமையவில்லை. வெங்கடாத்திரியின் படைகளால் அவை அல்லோல கல்லோலப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. இப்ராகிமினால் தன் படைகளை ஒரு சிறிதும் சீரமைக்கவோ, தலைநகரில் அமைதி உண்டு பண்ணவோ முடியவில்லை. இராமராயனும் ஆதில்ஷாவும் இதற்குள் புதுப்படைகளுடன் வந்ததால் குழப்பம் கட்டுக் கடங்காததாயிற்று. இப்ராகீம் அவர்களை ஒரு சிறிதும் தடுக்க முடியவில்லை.

இராமராயன் தன் படைத்தலைவர்களான ஜகதேவ ராவையும் அயினுல் முல்க்கையும் கோலகொண்டாவெங்கும் சுழன்று சூறையாடும்படி கட்டளையிட்டான்.கொண்ட வீட்டை ஆண்டு வந்த தன் மருமகன் சித்திராஜு திம்ம ராஜுவை ஐம்பதினாயிரம் வீரருடன் கொண்டபள்ளியையும் மசூலிப் பட்டினத்தையும் தாக்கும்படி தூண்டினான். படைத் தலைவர் சித்தபா கான் என்ற சீதாபதியையும் வேங்கடாத்திரியையும் இராசமகேந்திர வரத்திலிருந்து வந்து எல்லூரைத் தாக்கும்படி ஏவினான்.

பாம்புகள் பலவற்றின் பாய்ச்சலுக்கிடையே அகப்பட்ட தேரையின் நிலையில் இப்போது இப்ராகீம் இருந்தான். ஆனால் இத்தகைய இக்கட்டில் கூட அவன் போர்த்திறம் காட்டினான். இராமராயன் தீவிரத்தாக்குதல் திட்டம் அவன் பேரரசின் ஓர் எல்லையைப் பாதுகாப்பற்றதாக்கியிருப்பது உணர்ந்தான். அதுவே கொண்ட வீடு. தன் தலை சிறந்த படைத்தலைவர் களான முஸ்தா பாகான், அசிம்கான், யாகூப்கான், சிந்தகுண்டா தர்மாராவ் ஆகியவர்களை அப்பகுதிமீது விரைந்து தாக்கும்படி அனுப்பினான். படைகளின் ஒரு பகுதி முன்னதாக விரைந்து சென்று முற்றுகை தொடங்கிற்று. இராமராயன் இத்தகைய ஒரு திருப்பத்தை எதிர்பாராமலில்லை. அவன் உடனே தன் மற்றோர் உடன் பிறந்தானான யாரா திம்மராஜூவுடன் வீரப்படைத்