196
அப்பாத்துரையம் – 13
தலைவன் வேலுகோடி சின்ன திம்மா நாயுடுவைக் கொண்ட வீட்டுக்கு அனுப்பினான்.
சின்னதிம்மா நாயுடு கொண்ட வீட்டு முற்றுகையை எளிதாக முறியடித்து எதிரிப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டான்.ஆனால் முஸ்தாபாகான் வசமிருந்த படைகள் கர்நூல் மாவட்டத்தின் மலைப் பகுதிகளை வளைத்துக் கொண்டு அங்குள்ள போயா மலங்குடி மரபினரிடையே பெருங்கிலியும் குழப்பமும் பரப்பின. யாராதிம்மராஜூ உடனே சின்னதிம்மா நாயுடுவை அத்திசைக்கு அனுப்பி, முஸ்தபாகானை முறியடித்துப் போயா மரபினரிடையே அமைதி வருவித்தான். முஸ்தாபா விடமிருந்த பல யானைகளும் விசயநகரப் படைகளின் கைவசமாயின. எதிரிப் படைகளைக் கிருட்டிணை யாறுவரைத் துரத்திய பின், அவர்களைப் பின்னும் அவர்கள் நாட்டினுக்குட் சென்று வேட்டையாடத் திட்டமிட்ட னர். ஆற்றிடையே ஒரு தீவில் உள்ள கோட்டையில் அரண் செய்து கொண்டு ஓய்வு கொள்ள எண்ணிய கோலகொண்டாப் படைகள் பேரிழப்புக்கும் படுகொலைக்கும் ஆளாயின.
பட்டாணியர் பாதுகாப்பில் இருந்த தேவரக் கொண்டாக் கோட்டை தவிர மற்றக் கோட்டைகள் விரைவில் ஒவ்வொன்றாக விசயநகரப் படைகளின் கைவசப்பட்டன. சிட்டேலா, பேரர், தேவுலபள்ளி, நாகுலபாடி, ஓடப்பள்ளி, நல்லகொண்டா, அருவப் பள்ளி, இந்திரகொண்டா முதலிய முக்கிய கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழ்ச்சியடைந்தன. ஜகதேவராவ் கோலகொண் டாவிலேயே செல்வாக்குப் பெற்றிருந்ததால் கோவில் கொண்டா, பாங்கல், கணபுரா ஆகிய கோட்டைகளை அதன் தலைவர்கள் போரிடாமலே இராமராயனிடம் ஒப்படைத்தனர். கோலகொண் L அன்று கண்ட அலங்கோலம் அது முன் என்றுமே காணாத தாயிற்று. அது காணத்தாளாத இப்ராகீம் தன் செருக்கெல்லாம் விட்டுப் போரை நிறுத்தும்படி இராமராயனைக் கெஞ்சி மன்றாட வேண்டியதாயிற்று. வெற்றிச் சின்னங்களாகப் பாங்கல், கணபுராக் கோட்டைகளை விட்டுக் கொடுக்கச் செய்து இராமராயன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தான்.