வெற்றித் திருநகர்
பூங்காவிலாடிய புள்ளிமாமயில்
(197
பேரரசுகளிடையேயும் வல்லரசுகளிடையேயும் இருந்த வேற்றுமைகளால் தென்னகம் வடதிசைப் புயல் கண்டு கிலி கொண்ட காலம் மலையேறிவிட்டது.வடதிசைப் புயல் வடதிசை யிலேயே தங்க, அதனை எதிர்த்தடக்கிய அதன் தென்னக நிழல் அம்மரபைப் புதுப்பிக்கக் கருதி மண் கௌவிற்று. தென்னகம் தன்னைக் காத்துக் கொண்டது மட்டுமல்ல. தேசீயச் சிற்பிகள் கால முதல் பேரரசு கோட்டை கட்டி எதிர்த்தாக்குதல் தளமிட்டது. கிருட்டிண தேவராயன் எதிர்த்தாக்குதலை வெற்றிகரமாக நடத்திப் பேரரசின் உச்ச நிலை வாழ்வு தந்தான். ஆனால் இராமராயன் உச்ச நிலைக்கும் அப்பால் சென்றான். புயலின் நிழல்கள் நிலைகுலைந்து ஆடியடங்கின.
புயல் கண்டாடும் புள்ளி மாமயிலாக தென்னகப் பூங்கா வெங்கும் சுற்றி வெற்றித் திருநட மாடினான்.
இராமராயன் பெருமை இத்துடன் அமைவதன்று. அது புள்ளிமாமயிலின் வெற்றித் திருநட மட்டுமன்று, பொன் மாமயிலின் புகழ்த்திரு நடமாகவும் அமைந்திருந்தது.
தென்னக இஸ்லாமிய அரசுகளின் புயல் மரபில் வந்த செருக்கை அவன் அடக்கவிரும்பினான், அடக்கினான். ஆனால் அவன் நோக்கம் அவ்வரசுகளை அழித்துத் தன் பேரரச எல்லை பெருக்குவதன்று. இதனை ஒவ்வொரு போர் முடிவும் நன்கு காட்டுகிறது. தென்னக இஸ்லாமியப் பேரரசு மரபில் வந்த பீடாரை அவன் வென்ற போது, போர் நிறுத்தத்துக்கு அவன் கோரிய கட்டுப்பாடு தன் நேசநாடாய், அவ்வரசு தன் போர்களில் துணைதர வேண்டுமென்பதே. ஆணவமிக்க இப்ராகீம் அலைக்கழிவுற்ற சமயத்தில்கூட, பேரரசு நெடுநாள் தனதாகக்
கா ண்டிருந்த பாங்கல் கோட்டையுடன் மற்றும் ஒரு கோட்டையை அவன் தன் வெற்றிச் சின்னமாக மட்டுமே கோரினான். மற்றப் பிடிப்பட்ட கோட்டைகளையெல்லாம் அவன் மீண்டும் கோல கொண்டாவுக்கே தந்தான். இஸ்லாமியரை மட்டுமன்றி இஸ்லாமிய அரசுகளையும் அவன் நேசநாடுகளாகக் கொண்டு தென்னக அமைதியும் ஒழுங்குக் காகவே கனவு கண்டான் என்பதை இவை காட்டுகின்றன.