206
அப்பாத்துரையம் – 13
விசயநகரப் பேரரசுடன் அவற்றை இணைத்துத் தென்னகத்தையே அவன் ஒரு தேசீயக் கோட்டையாக்க முனைந்தான். இன்றைய வரலாற்றாசிரியர் வரலாற்று இத்தென்னக முழுநிறை தேசீயத்தை உணராதது போலவே, அந்நாளைய இஸ்லாமிய அரசுகளும் உணராது பொறாமை கொண்டன என்று கூற இடம் ஏற்படலாம். ஆனால் போர் வரலாறு இதைக்கூடப் பொய்ப்பிக்கிறது. உண்மையில் இது போருக்குப் பின் இஸ்லாமியரிடையே பரப்பப்பட்ட விளக்கமே தவிர, போர்க்கால நிலைமையின் சரியான விவரம் அன்று, போர்க் காலத்தில் பொறாமையும் ஒருவேளை பேரவாவும் காரணமாக இக்கருத்துக்களைப் பரவவிட்டவன் கோலகொண்டா குதுப்ஷாவே என்னல் வேண்டும்.
து
அரசன்
ப்ராகீம்
தென்னக முஸ்லிம் அரசுகள் தம்முன் போர்க்காலத்தின் முன்னோ பின்னோ என்றுமே ஒன்றுபட்டிருந்ததில்லை. அத்துடன் வடதிசைப் புயல்மரபு இஸ்லாமியரிடையே நாட்டு முஸ்லிம், அயல் முஸ்லிம் என்ற வேறுபாட்டையும் உண்டு பண்ணி வளர்த்து வந்தது. இதன் தடங்களைத் தென்னகத்திலும் வடதிசையிலும் இன்னும் காண்டல் அரிதன்று. இஸ்லாத்துக்குப் புறம்பான எல்லையில் வடதிசைமரபு மக்களுலகிலே வழங்காத ஒரு மொழியைத் தம் தாய்மொழிகளுக்கு மேற்பட்ட ‘இனச் சின்ன'மாகக் கொள்கிற தென்றால், அதனோடிணையான வடதிசை இஸ்லாமிய மரபு நாட்டு மக்கள் மொழியல்லாத ஏதேனும் ஒரு அயல் மொழியைத் தம் இனத் தாய்மொழியாகவே என்றும் கொண்டு வேற்றுமை பேணி வருகிறது.
போருக்குரிய காரணம் இராமராயனின் பெருமிதத் தன்னம்பிக்கையும் அதன் விளைவான கண்மூடித்தனமுமே என்பதைப் பொதுவாக அவன் வரலாறு மட்டுமின்றி போரின் போக்குமே காட்டுகிறது. தன் அருகே உடன் பிறந்தாற்போல, பிள்ளைகள் போல தன்னால் நடத்தப்பட்ட இஸ்லாமியரின் அரசியல் மனப் பாங்குகளை இராமராயன் சரிவர உணரவில்லை. தேசீய வாழ்வின் எல்லாப் பொறுப்புக்களையும் அவனே ஏற்றுக் கொண்டு பிறரை அவ்வழி பயிற்றுவிக்கத் தவறிய நிலையில், அவன் ஏமாற்றமே அவன் தோல்வியாகவும், பேரரசின் ஏமாற்றமுமாகவும் தோல்வி யாகவும், நாளடைவில் தென்னகம்,