உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

207

கீழ்த்திசை உலகு ஆகியவற்றின் ஏமாற்றமாகவும் தோல்வியாகவும் அமைந்தன.

புயல்மரபின் கூட்டுறவு

விசயநகரப் பேரரசை, அதுவும் இராமராயன் ஆட்சிக் காலப் பேரரசை மற்ற இஸ்லாமிய வல்லரசர் ஒருவரோ, இருவர் மூவரோ சேர்ந்துகூட வெல்வது ா எளிதன்று. அதனை மீட்டெழாமல் அடக்குவதென்பது இன்னும் அரிதான முயற்சி. இவற்றை இராமராயன் போர்கள் நன்கு காட்டிவிட்டன. விசயநகரப் பேரரசை ஒழிக்க முற்பட்ட எதிரிகள் இதனால் பெருமுயற்சிகள் செய்து கூட்டுறவைப் பெருக்க முயன்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் கூட்டுறவில் யார் யார் சேர்ந்திருந்தனர் என்பது மட்டுமன்று அதனை இயக்கி மூல முதல்வர் யார் என்பதிலேயே இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்பாளர் வேறுபடுகின்றனர். பெயரறியப்படாத கோல கொண்டாவுக்குரிய வரலாற்றாசிரியர் தம் நாட்டரசர் இப்ராகீம் குதுப்ஷாவே மூல இயக்குநன் என்றும், சயீர் அலீ என்பவர் தம் நாட்டரசன் ஹுசேன் நிஜாம் ஷாவே முதல்வன் என்றும், பெரிஷ்டா பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவே மூலமுதல்வன் என்றும் கூறுகின்றனர். ஆனால் கூட்டுறவில் இணைந்தவர்கள் இந்த மூவர் மட்டுமே என்று இம்மூவருமே குறித்துள்ளனர். பெரிஷ்டாவும் நிஜாமூதின் அகமதும் இம் மூவருடன் நான்காம் உறுப்பினனாகப் பீடார் அரசன் அலி பரீத்ஷாவையும் சேர்த்துக் கொள்கின்றனர். இஸ்லாமியச் சார்பற்ற ஆதாரங்களோ இந்நால் வருடன் பீடாரையும் சேர்த்து இஸ்லாமிய மன்னர் ஐவருமே ஒருங்குகூடி இராட்சசித் தங்கிடிப் போரில் ஈடுபட்டனர் என்று கூறுகின்றன.

வடதிசை முகலாயப் பேரரசன் அக்பர் படைகளே இப்போரில் ஈடுபட்டதாகவும், அக்பரே நேரில் வந்து போரிட்டதாகவும் இரண்டு ஆதாரங்கள் எழுதியுள்ளன.

இறுதிச் செய்தி காலச் சூழ்நிலைக்கு முற்றிலும் ஒவ்வாத பிற்கால இணைப்பு என்பதில் ஐயமில்லை.

பேரார் ஆண்ட புர்ஹான் இமர்த் உல்முல்க் நிஜாம் ஷாவுடன் கொண்டிருந்த வேற்றுமை காரணமாகப் போரில்