உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

215

விசயநகரப் படையில் நடு அணிக்கு இராமராயனே தலைவனாயிருந்தான். இடதுபுறம் அவன் உடன் பிறந்தான் திருமலையும், வலப்புறம் மற்ற உடன் பிறந்தான் வெங்கடாத் திரியும் தலைவர்களாயிருந்தனர். முஸ்லிம் அரசுகளின் பக்கத்தில் இராமராயனுக்கு எதிராக கோலகொண்டா அணிகளும் நின்றன. கடைசிப் போரையே முழுப் போராகக் குறிக்கும் வரலாறுகள் பீடார்படைகள் கோலகொண்டாவுடனும், பீசப்பூர் படைகள் திருமலையின் பக்க அணிக்கெதிராகவும் நின்று போரிட்டதாகக் குறிக்கின்றன. ஆனால் போர்த் தொடக்கத்தில் பீடார்ப்படைகள் வெளியேறிவிட்டதாகவும் பீசப்பூர் படைகள் விலகி நின்றதாகவும் தெரிவதால், முதல் இருபத்தொரு நாட்களும் அகமதுநகர், கோல கொண்டாப்படைகளின் போராகவே அமைந்திருந்தன.

போர்த் தொடக்கத்தில் முஸ்லிம் அரசர் பக்கத்திலிருந்து பிண்டாரி வில் வீரரும், கள்ளர் படைகளும் கிருட்டிணையாறு கடந்து விசயநகர எல்லைப்புறங்களைச் சூறையாடி அழிவு பரப்பின. இராமராயன் தலை நகரையும் கடை வீதிகளையும் காக்க 10,000 குதிரை வீரரையும் 20,000 காலாட்களையும் உடனே அனுப்பினான். அமைச்சர்களை அழைத்துத் தங்கள் உதவிப் படைகளுடன் இராட்சசித் தங்கிடி வரிசை முழுவதிலும் நின்று விசய நகரப் படைத் தளங்களைக் காக்கும்படி கட்டளையிட்டான். இராமாயணம், குமாரபாணம், சண்டிபாணம் என்று அந்நாளில் பெயரிடப் பட்டிருந்த வெடிகுண்டுகள், வாணவெடிகளைப் படைவீரர்களுக்கு வழங்கியும், ஆடை அணி மணிகள் அளித்தும் அவன் படை வீரர்களையும் தலைவர்களையும் ஊக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பினான்.

முதல் மூன்று நாட்களில் அகமது நகர், கோலகொண்டாப் படைகள் சிறிது முன்னேறின. ஆனால் அலி ஆதீல்ஷா நிலையை முழுதும் உறுதி செய்து கொள்ளாமல் இராமராயன் முழுத் தாக்குதலில் முனைய விரும்பவில்லை. போரில் எதிரிகளுடன் அவர்கள் சேர்த்துக் கொள்வதைக் கண்டித்தும் நட்புக்கோரியும் அவனிடம் பரிசுகள் அனுப்பினான். அலி ஆதில்ஷாவும் நட்புரிமையுடனே பரிசுகளனுப்பி நடுநிலை உறுதி கூறினான். இராமராயன் இதனால் மன அமைதி பெற்றப் படைவீரர் களுக்குப் புதிய ஆணைகளும் புதிய பரிசுகளும் ஊக்குரைகளும்