உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

217

ஐவர் ஒன்றுபட முடியாத நிலையில் கூட ஐங்கவர்ச் சூழ்ச்சி செய்து தம் மனக்கோள் நிறைவேற்றிவிட அவர்கள் ஆர்வத் திட்டமிட்டனர். தாம் பெற்ற தோல்வியையே சதித் திட்டத்தின் முதற்சுவராக்கிச் சமரசப் பேச்சுப்பேசி, சூழ்ச்சி ஏற்பாடுகளுக்கான காலவாய்ப்பும் மறைதிரையும் பெறுவது; அதன் மறைவில் ஒரு புறம் கூட்டில் இன்னும் சேராத அலி ஆதில்ஷாவை நயம், பயம் கெஞ்சுதல், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல், பாசம் வளர்த்தல் முதலிய பல்வேறு முறைகளால் கூட்டில் சேர்த்துக் கொண்டு, மற்றொருபுறம் அதே சமரச நட்புப் போர்வையில் விசயநகரப் பேரரசின் இஸ்லாமியப் படைத் தலைவர், படைவீரர்களைத் தம் வயப்படுத்துவது; போர் நிலை மறந்திருக்கும் எதிரிமீது திடீரெனப் பாய்ந்து தாக்குவதுடன் போரின் நடுக்கட்டத்தில் சதிக்குள் சேர்ந்து விட்ட அலி ஆதில்ஷாவின் படைகளையும் விசயநகர இஸ்லாமியப் படைப் பிரிவுகளையும் திடுமெனத் துரோகச் செயலில் இறங்க வைப்பது; இத்தனை குழப்பங் களிடையே இராமராயனைத் தனிப்படுத்திக் கைப்பற்றவோ, கொல்லவோ வகை காண்பது - இவையே புயல் மரபினர் வகுத்த ஐங்கவர்த் திட்டத்தின் கூறுகள் ஆகும்.

போர்த் திட்டத்தால் கனவுகாண முடியாத வெற்றியை இந்தச் சதித் திட்டத்தில் அவர்கள் எதிர்பாரா வகையில் கண்டனர். இராமராயன் தன்னம்பிக்கையும் களங்கமில்லாத பெருமித உள்ளமும் இச்சதிகளை எதிர்பார்க்கவுமில்லை. இவைபற்றிக் கனவு கண்டதுமில்லை. தம் தலைவன் நேசப் பேச்சுக்களிடையே கருத்துச் செலுத்தியிருந்த நேரத்தில் வெற்றி விழாவில் அயர்ந்திருந்த படைத்தலைவர்கள் களக்காவலை மறந்தனர். பீசப்பூர்ப் படைகள் ஆறு கடக்கவிடாமல் கண் பார்த்திருந்த காப்புப் படைகள் மெல்ல நழுவி வெற்றி விருந்துகளில் கலந்து கொண்டிருந்தன.

போர்த் தொடக்கத்திலேயே அலி ஆதில்ஷா நேச ஏற்பாடுகள் மூலம் மற்ற இரு முஸ்லிம் அரசர்களின் உறவினனாய் இருந்தான். இந்த நேச உறவையும் பாச உறவையும் இப்போது அவ்விரண்டு அரசர்களும் தம் புதிய சதிர் சூதாட்டத்தின் பகடை ஆக்கினர். அலி ஆதில்ஷாவின் இரண்டக நடத்தைதான் தம் இஸ்லாமிய இனத்தோல்விக்கும் அழிவுக்கும் மூலக்காரணங்கள்