உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

அப்பாத்துரையம் – 13

முழுக் கதிரவனொளியிலோ, முழுநிலவிலோ, புயலிலோ, மழையிலோ காணமுடியாத வானவில்லை நாம் புயலோய்ந்த பின் தோன்றும் இளவெயிலிலே மட்டும் காண்கிறோம். பேரரசும் இதற்கொப்பவே புயல் கடந்த தூவான நாட்களிலேயே புகழ் வானில் வானவில் வளையங்களை நமக்குத் தோற்றுவித்துள்ளது.

சு

தேசம் அளாவித் திகழ்பேரரசு சிதைவுறினும் பாசமகன்றில் தாகப்பசுந்தமிழ் நாயகரும் நேசப்பிணக்கு நிகழ்த்திடநீடு குடிமரபில்

யாசமாகாவியம் ஏந்துறும்தென்னகம் வாழியவே!

புயலின்பின் புதுவளம்

தென்னகத்தின் மைய வாழ்விலே புயல்வாரியடித்த சமயத்திலேயே தமிழகம் மதுரை மண்டலத் தலைவனான விசுவநாத நாயகனின்கீழும், தஞ்சைமண்டலத் தலைவனான செவ்வப்ப நாயகன்கீழ், செஞ்சிமண்டலத் தலைவனான துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயகன் கீழும் புதுத்தேசீயம் படைத்து வந்துள்ளது.விசுவநாத நாயகன் 1529-லிருந்து விட்டுவிட்டுப் பல தடவையாக 1564வரை மதுரை மண்டல ஆட்சி புரிந்து வந்தான். அவன் ஆட்சியின் கடைசிப் பருவத்தில் அவனுடன் தமிழகச் செல்வரான அரியநாத முதலியாரும் பங்கு கொண்டிருந்தார். அவர் மைய ஆட்சியிலேயே அமைச்சராகவும் படைத் தலைவராகவும் கிருட்டிண தேவராயன் காலமுதல் இருந்து அனுபவம் பெற்றிருந்தார். அவரே தமிழகத்தை 72 பாளையங் களாக வகுத்தவர் என்று கூறப்படுகிறது. தவிர மதுரை, திருச்சிராப்பள்ளி, சீரங்கம் ஆகிய நகரங்களில் கோட்டை காத்தளங்களும் தெருவீதி அமைப்புக்களும் கோயில் திருப்பணிகளும் முற்றுவித்து, வேளாண்மைக்குரிய ஏரி குளங்கள், அணைக்கட்டு வாய்க்கால்கள் கட்டுவித்தவராக அவர் புகழ் நிறுவியுள்ளார்.

அந்நாளில் சோழன் மதுரை மாவட்டக் கம்பம் பள்ளத்தாக்கில் வலிமையுடன் ஆண்டுவந்ததாக அறிகிறோம். இது இராமராயன் ஆட்சிக்கால நிலையின் விளைவு என்பதில் ஐயமில்லை. விசுவநாத நாயகரும் அரியநாத முதலியாரும்