உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றித் திருநகர்

61

கோட்பாடுகளிலும் அதுபோலவே அவர் தம் கோட்பாட்டையோ, தம் மடத்தின் கோட்பாட்டையோ வற்புறுத்தாமல் ஒரு தேசீய நிலை வகுத்துக் கொண்டார்.

தம் சமயக் கோட்பாட்டையோ, தம் அறிவுத்துறைக் கோட்பாட்டையோ, ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமலே, மற்றச் சமயத் தலைவர்கள், அறிவுத்துறைக் கோட்பாட்டுத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பெற்ற அவர் பண்பிணக்கத்திறம் அரசியல் தலைவர்களுக்கும் அரிய ஒன்றேயாகும் என்பதில் ஐயமில்லை.

வித்தியாரணியரின் இயக்கத்தால் தென்னக சமுதாயத்திலும், தென்னகம் கடந்து துணைக்கண்டத்திலும் ஏற்பட்டுள்ள விசித்திர (தேசீய, இன) ஒற்றுமையைப் பல கீழ்திசை, மேல் திசை அறிஞர்கள் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளனர்.

'கிழக்கு, மேற்குத் திசைகளின் வருங்காலம்' என்ற ஏட்டில் சர் பிரடரிக் ஒயிட் என்பவர் இதை இந்தியாவுக்கே பொதுவான ஒரு பண்பாகக் காண்கிறார்.

இந்தியாவின் புதிர்களுக்குள்ளே பெரும்புதிர் ஒன்று உண்டு. இந்தியாவின் மலைமடுவான பல்வகை வேறுபாடுகளுக்கு மேற்பட ஒரு மாபெரிய ஒற்றுமை பரவியுள்ளது. அதுதெளிவாகக் கண்ணுக்குப் புலனாவதில்லை. இந்தியாவை ஒரே அரசியலுக்குள் கொண்டு வரவும் அது தவறியுள்ளது.ஆனால் அது மெய்யானது, வல்லமை வாய்ந்தது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கூட அதன் சூழல் விளைவுகளுக்கு ஆளாய்விட்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயுள்ளது.

இந்தியாவிற் பரவியுள்ள இப்பண்புகளுக்குப் பிறப்பிடம் தென்னகமே என்பதைக் காண்கிறார் வின்சென்ட் ஏ.ஸ்மித் என்ற புகழ் சான்ற கீழை வரலாற்றாசிரியர்.

'இந்து இந்தியாவின் உள்ளார்ந்த ஒற்றுமைக்குச் சான்று இராமானுசர் போன்ற தென்னக ஆசாரியர்கள் பணி இமய முதல் குமரிமுனை வரை தம் வயப்படுத்த முடிந்தது என்பதே. இன்றுகூடக் குருதி வேறுபாடு. பழக்க வழக்க வேறுபாடு, அரசியல் வேறுபாடு ஆகியவற்றின் சிதறடிக்கும் திறங்களிடையே அது செயலாற்றி வருகிறது'.