உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100 ||

அப்பாத்துரையம் - 14



||


பிராமணரும் மற்ற உயர் வகுப்பினரும் நாட்டு மக்களிடையே தாம் தனிப்பட்ட ஆரிய மரபினர் அல்லது (ஆண் வழியிலேனும்) ஆரியக் குருதிக் கலப்பு மிக்கவர் என்று பெருமை கொண்டு தம் உயர்வு நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. அதே சமயம், இதே அடிப்படையில் வடஇந்தியத் தாய் மொழிகள் பேசுவோர், சிறப்பாக அம் மொழிகள் பேசும் உயர்குடியினர், தம் மொழிகளே ஆரிய இன மொழிகள் என்றும், தாமே ஆரிய மரபினர் அல்லது ஆரியக் கலப்பு மிக்க மரபினர் என்றும் புதிய உரிமை கொண்டாட முடிகின்றது. (தம் தாய்மொழிகள் இழந்துவிட்ட பழமைச் சிறப்புகளைக் கூடச் சமக்கிருதத்தில் கண்டு ஆறுதல் பெறும் உணர்வு அவர்களை வலிந்து சமக்கிருதப் பற்றாளர்களாக்கி வந்துள்ளது).

சாதி வருண முறைமையில் சாதி மரபு வேறு, வருண மரபு வேறு என்று கொண்டவர், ஆசிரியர் மறைமலையடிகளார். சாதி மரபை அமைத்தவர்கள் வேளாளரே என்றும், வருணமரபை அதனுடன் இணைத்து, அந்த இணைமரபுக்குக் கடவுட் படைப்பாதாரம் தந்து அதனை வலியுறுத்தியவரே ஆரியர் என்றும் அவர் கருதினார். இங்கே அடிகளார் வேளாளர் என்றது தமிழகத்தின் ஒரு வேளாள மரபையோ அல்லது பல வேளாள மரபுகளின் தொகுதியையோகூட அன்று. தென்னக மெங்கும் இந்தியாவெங்கும், அதே, படிநிலையினுடைய சமயச் சார்பற்ற இந்தியாவின் சமுதாய ஆட்சி வகுப்பினையே அவர் வேளாளர் என்ற சொல்லால் குறிப்பிட்டார் என்பது தெளிவு. ஆரியர் என்று அவர் கூறுவதும் பிராமணர் உள்ளிட்ட ஆட்சி வகுப்பினரையே என்று காணலாம்.

தற்காலப் பொருளியல் சமுதாய முறை ஆய்வாளர், சிறப்பாக அறிஞர் குணா, 'சாதியத்தின் தோற்றம்' என்ற தம் ஆய்வேட்டில்,பெயரளவில் அடிகளார் கருத்தை ஒதுக்கினாலும், அதற்குத் தம் புதிய பொருளியல் சமுதாயவியல் ஆய்வு மரபின்படி, புது விளக்கமே தந்துள்ளார். நாகரிக உலகெங்கும் இயல்பாக மறைந்துவிட்ட ஆதி மனிதனின் இனமுறை வேறு பாடுகளை (Tribal Organisations) இந்தியாவில் மட்டும் நிலவுடைமை ஆட்சி யாளர் (Class of Feudal Landlordism) அழியாது பாதுகாத்து, அதன்மீது தொழிலடிப்படையில் சாதி