உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 101

மரபு முறை எழுப்பினர் என்றும், சமய குருமார் அதற்கு வருணப்பூச்சும், கடவுட் படைப்பாதாரமும் வழங்கி யுதவினர் என்றும் அவர் விளக்க முற்பட்டுள்ளார்.

-

அடிகளாரும் சரி, புதிய பொருளியல் சமுதாயவியல் ஆய்வாளரும் சரி இரு சாராருமே இன வேறுபாட்டுக் கோட்பாட்டின் சாயலிலிருந்து முழுவதும் விலகிவிடவில்லை என்பது காணலாம். ஏனெனில் ஆரியர், பிராமணர், சமயகுருமார் என்ற சொற்கள் சொற்கள் கிட்டத்தட்ட கிட்டத்தட்ட ஒரே பண்பு குறித்த சொற்களாகவே வழங்கப்பட்டுள்ளன; அதுபோலவே,திராவிடர், வேளாளர், நிலவுடைமையாட்சியாளர் என்ற சொற்களும் பெரிதும் பழைய மரபுச் சொற்களுக்கு ஈடான புதிய மாற்றுச் சொற்களேயாகும் என்று காணலாம். தவிர, ஆசிரியர் குணா கூறும் இன மரபு (tribe) என்பது வரலாற்றுக் காலத்துக்கு நெடுநாள் முன்பே நாகரிக உலகம் கடந்துவிட்ட ஒரு படிநிலை ஆகும். நாகரிக உலகுக்கு வெளியேயிருந்து வந்த பண்படா இனங்களுக்கு மட்டுமே அது அணுக்க கால உரிமையுடையது. அதனிடமாக நாகரிக உலகம் கண்டது இனமரபு அன்று; குடியரசு அடிப்படையிலமைந்த குலமரபேயாகும். இது கீழே விளக்கப்பட விருக்கிறது.

உழைப்பின் பயன் பெறாமலே கூலிக்கு உழைப்பவராகிய அடிநிலை வகுப்பினர், உழைப்பின் பயனை ஆள்பவராகிய உயர் வகுப்பினர், இரு சாராரிடையேயும் பாலம் போல, அதே சமயம் இரு சாராரையும் நிலையாகப் பிரித்து வைப்பவராய், அத்துடன், தம் போட்டிகளால் அப்பிரிவினையை நிலவரப்படுத்தி வளர்ப்பவராக விளங்கும் நடுத்தர வகுப்பினர் ஆகிய மூவகுப்பு வேறுபாடு நாகரிக உலக முழுமைக்கும் பொதுவாக வளர்ந்து வந்துள்ள, வளர்ந்து வரும் வகுப்பு வேறுபாடு ஆகும். ஆனால் இந்தியாவிலே உலக முழுமைக்குள்ள இந்த வேறுபாடு மட்டுமன்றி, இதற்கும் அடிப்படையாயமையும் சாதி வருண முறை வேறுபாடு அதற்கும் முற்படத் தோன்றி வளர்ந்துள்ளது, வளர்ந்து வருகிறது. ஆய்வாளர் எவரும் இந்த வேறுபாட்டிலோ, வேறுபாடுகடந்து அவற்றிடையே மிளிரும் அடிப்படை ஒருமைப்பாடுகளிலோ, இரண்டும் கலந்தமைந்த சிக்கல்களிலோ, குளறுபடிகளிலோ கருத்துச் செலுத்தவில்லை.