உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
110 ||

அப்பாத்துரையம் - 14



()

||-


ஒரே நேர் அலைவீச்சாகப் பரவிவிடவில்லை. கிட்டத் தட்ட அவற்றின் அடுக்கடுக்கான செயற்பாடுகளை நாம் கிட்டத்தட்ட ஒரு சீர்படவே இந்திய, தமிழக வரலாறுகளில் வகுத்துக்

காணலாம்.

முதலாவது தளத்தில் வேளிரிணைவாலோ போர் வெற்றிகளாலோ, அரசியற் புரட்சிகளாலோ தோன்றிய முடியரசர்கள், மண உறவு, நட்புறவு ஆகியவற்றின் மூலமாக வேளிருடன் மேலும் இணைந்தும், பகைமை மூலமாக அவர்களை அழித்தும் படிப்படியாகத் தம் ஆட்சி எல்லையையும் வலிமையையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொண்டனர். அத்துடன் முடியரசரும் குடியரசரும் மோதிக்கொண்ட போதெல்லாம், இந்த நட்புறவு, பகைமையுறவு ஆகியவைகள் வேளிரையும் பிரித்து, ஒருவருடன் ஒருவர் போராடச் செய்தன. ஆனால், இத்தகு போராட்டங்களில் எந்த முடியரசு வென்றாலும் தோற்றாலும், பொதுவாகக் குடியரசுகளின் அழிவே அவற்றால் விரைவுபடலாயிற்று; மற்றும் இத் தளத்திலேயே வேளிர் பலர் முடியரசருடன் நட்புறவு கொள்வதனுடன் அமையாமல், அவர்களிடம் படைத் தலைவராகவும் அமைச்சராகவும் அமர்ந்து பணியாற்ற முனைந்திருந்தனர்.

டி

தவிர, இத் தளத்திலேயே முடியரசரும் குடியரசரும் தம்முள் ஒத்திசைவான போட்டியிட்டு, தமிழுலகுக்கே (தமிழ் ஈழம் உட்பட) ஒருமை அளித்த தமிழ்ச் சங்கம் அமைத்து, அதன்மூலம் தமிழுக்கும் தமிழ்ப் புலவருக்கும் பேராதரவு காட் அதனை, அவர்களைப் பேணினர். இதுபோலவே, இருசாராரும் தம்முள் ஒத்திசைவான போட்டியிட்டுக் கலையும், தொழிலும், வாணிகமும் வளர்த்தனர். அனைவரும் சேர்ந்து ஊக்கிய இந்தத் தொல் பழந் தேசியப் பண்பாட்டின் மூலம் புலவர் வகுப்பினரும், அவர்கள் துணைவர்களான பாணர், பாடினியர், கூத்தர், பொருநர், விறலியர் முதலிய கலைவகுப்பினரும், கணக்காயர் (பேராசிரியர்), இளம் பாலாசிரியர் (பள்ளி ஆசிரியர்), கணியர் (வானூலார்), சமய அறிஞர், புரோசர் (சமய குருமார்), மருத்துவர், நோட்டர் (பொன் மணி தேர்வாளர்) முதலிய அறிஞர், கலைஞர், வினைத் திறலாளர் வகுப்பினரும் வளர்ச்சியுற்றனர்.