உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 111

இவ்வகுப்புகளின் ஆதரவு நாடி, முடியரசரும் குடியரசரும் தம்முள் நட்பு போட்டியிட்டனர். ஆனால், வேளிர்களைப் போல, இவ்வறிவுக்கலை சமயவகுப்பு பிளவுபடாமல், வேளிர் குடியரசர் ஆகியோரிடையே கூடப்பிரிவுறாமல், தேசியப் பண்பார்ந்த வகுப்பாகவே ஒருமனமுடன் செயல்பட்டது. (கடைச்சங்க இலக்கியம் காட்டும் தமிழ்மரபுப் பெருமை, இது) ஏனெனில், தமிழ்மொழி ஒருபுறம் மக்கள் மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் ஆட்சி கலை அறிவு பண்பாடு ஆகிய எல்லாத் துறைகளுக்கும் உரிய ஒரே மொழியாகவும்; மறுபுறம் அரசர், வேளிர், பொது மக்கள், மேன்மக்கள் ஆகிய எல்லாரையும் இணைக்கும் ஒரே மொழியாகவும் நாகரிக உலகின் முழுஉரிமை தேசியமொழியாய் (பண்டைச் சீன சப்பான் மொழிகள் போல) இயங்கிற்று.

போரும் வீரப்போட்டிகளும், முடியரசுகளின் ஆட்சி விரிவுக்கு மட்டுமே பயன்பட்டன. ஆட்சியுறுதியும் ஆட்சி வளமும், சிறப்பாக முடியரசின் ஆட்சியுறுதியும் ஆட்சிவளமும், இந்த ஆதரவுப் போட்டிகளையே பெரிதும் சார்ந்தவை ஆயின.

இரண்டாவது தளமே, வரலாற்று முறையில் முடியரசுக் காலத்தின் அரசியல் தேசியத்தளம் ஆகும் என்னலாம். இத் தளத்தில், முடியரசர், வேள்புலங்களை விழுங்கிய பின்னும் பழமை வாய்ந்த அரசுரிமைக்கு உரியவரான குடியரசு மரபுகளில் பெண் எடுத்துத் தம் முடியுரிமையை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் பெருமுனைப்பும் பேரார்வமும் காட்டினர். (வேள் புலங்களின் ஆட்சியுரிமை ஆதிநாட்களில் பெண்டிருக்கே உரியதாயிருந்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது ஆகும். தவிர, வட இந்தியாவில் முதலாம் சந்திரகுப்தனின் லிச்சாவிக் குடியினர் மணஉறவும், கொங்கு நாட்டிலேயே சேரர், கொங்குச் சேரர் ஆகியோரின் யையாவிக் கோமான்குடிப் பெண்டிர் மணஉறவும் பிறவும் இதே சூழலை விளக்குவன ஆகும்) அத்துடன் தொன்றுதொட்டு ஆட்சியுரிமையும் ஆளும் பயிற்சி மரபும், மக்கள் தொடர்பும் உடையவராயிருந்த வேளிர் குடியினரையே அரசர்கள் தேர்ந்தெடுத்துத் தம் உரிமைச் சுற்றம் ஆக்கிக் கொண்டனர். இது மட்டுமோ? இரண்டாம் மனைவியை மணஞ் செய்து கொள்பவர் எப்படியாவது தம் முதல் மனைவியைப்