உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116 ||

அப்பாத்துரையம் - 14



() செய்தியாய் அமைந்திருந்தது. புதிய அரசியல் வகுப்போ சமக்கிருதச் சார்பான சமயச் சார்பு மூலம் இதனை மிக எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலும் வாய்ப்பும் உடையதாயிற்று.

உண்மையில் புதிய வகுப்பினரால் தம் ஆதரவுக்குரிய அரசருக்குச் சமக்கிருதச் சார்பான சமயத்தின் பெயரால் மரபாதரவுக்கும் மக்கள் ஆதரவுக்கும் மேம்பட்ட தெய்வீக ஆதரவையே வகுத்துத்தர முடிந்தது. சூரிய மரபு, சந்திர மரபு, அக்கினி மரபு போன்ற புதிய ஆட்சி மரபு, புதிய தெய்வீகக் கால்வழி மரபு ஆகியவைகளையே அரசருக்குப் பெற்றுத்தரும் அல்லது அவற்றை உறுதிப்படுத்தித் தரும் ஆற்றலும், அவற்றுக்குத் தம் சமக்கிருத மொழியில் புதிய ஆதாரங்கள் வகுத்துத் தரும் வாய்ப்பும் அவர்களுக்கு எளிதில் அமைந்து விட்டன.(சமக்கிருத மொழியும் சமக்கிருதக் கல்வியும் இதற்கேற்ப, அவர்களுக்கு மட்டுமே, அதிலும் அவர்களில் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மொழியாக, கல்வியாக இயன்றன)

ஆந்திரர், கடம்பர், வாணர், கங்கர், சாளுக்கியர் ஆகியோரையும் தம் எல்லை கடந்து பேருலகாள முற்பட்ட பிற அரசர் பேரரசர்களையும் போலவே, பல்லவர்களும் தமிழ் அல்லது தாய்மொழி மரபுக்கு மாறாகப் பாளி பாகத சமக்கிருத மரபுகளையே தொடக்கத்தில் முற்றாதரவாக மேற்கொண்டிருந் தனர். இது மூன்றாம் தள ஊழிக்குரிய பண்பே என்பதனைப் புத்த சமணச் சார்பான பாளி பாகதங்களின் முற்பட்ட வழக்கே காட்டுகிறது. பல வரலாற்றாசிரியரும் பல புலவோரும் பல்லவரை யும் பிறரையும் தமிழகத்துக்கு அல்லது தென்னகத்திற்கு அல்லது இந்தியாவுக்கே அயலவர் என்று கருத வைத்தற்குரிய சூழ்நிலை இதுவேயாகும். (சமக்கிருத இலக்கிய மரபு மட்டுமின்றி, பின்னாளைய உருது அல்லது இந்துஸ்தானி அல்லது இந்தித் தேசிய மரபும் தென்னகத்திலிருந்தே வடதிசைக்குப் பரவியவை ஆகும் என்பது கூர்ந்து கண்டுணர்தற்குரிய செய்தி ஆகும்).

ஆட்சி மொழி மாறுதலும் சமய மாறுதலும் முடியரசு பேரரசு களின் அரசு நெறிமுறைச் சூழல் வாய்ப்புகளுக்குரியனவே என்பதை வரலாற்றாய்வுகள் காட்டும். ஊணப் பேரரசன் தோரமாணன் (கி.பி.6ஆம் நூற்றாண்டு) தனக்கு முற்பட்ட குப்தப் பேரரசரின் வைணவ சமயத்தையும் அவர்களை ஆதரித்த