உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 117

வைணவ சமயத் தலைவரையும் ஒதுக்கித்தள்ளி, சைவ சமயமே தழுவி தன் தலைநகரான உஜ்ஜைனியில் அச் சமயத்துக்கும் சமயத் தலைவருக்கும் புதுவாழ்வும் புதுமலர்ச்சியும் அளித்தான் என்பதை அறிஞர் ஏ.எஸ்.பி.ஐயர் (Three Men of Destiny) எடுத்துக் காட்டியுள்ளார்.

மூன்றாம் தளத்தில், ஏற்பட்ட இத்தகு புதிய சூழ்நிலை களிடையே அரசுக்கு முடிசூட்டும் பழைய பெருமக்களின் உரிமையில் முடியரசுக்கு இருந்த அக்கறையும் ஆர்வமும் பெரிதும் குறையலாயிற்று. ஏனெனில் குடியரசுமரபுக்கும் அதனுடன் வேளிர்க்கும் கோமரபிற்கும் உரிய தெய்வீகக் கால்வழி மரபுரிமையும் ஆட்சி மரபுரிமையும் ஒருங்கே அரசராலும் பெருமக்களாலும் பொதுமக்களாலும் மறக்கப்பட்டுவிட்டன. இந்நிலை யில் பெருமக்களின் முடிசூட்டும் உரிமை மட்டுமின்றி, அரசுக்கு அரச மரபும் (சத்திரிய மரபும் அரசர் குலப்பிறப் புரிமையும்) அரசன் ஆட்சிக்குத் தெய்வீக ஆதரவும் ஒப்புதலும் வாங்கித்தரும் உரிமையும் அதை மறுத்து விடும் உரிமையும்கூட, படிப்படியாகப் புதிய ஆட்சி வகுப்பினரிடமே மெல்ல மெல்ல வந்தடைந்தன.

சி

தமிழ் மாக்கவிஞரான கம்பநாடர் (கி.பி. 9 அல்லது 10 அல்லது 12ஆம் நூற்றாண்டு) இராமபிரானின் முடிசூட்டு விழா வருணனையினிடையே, பழைய முடிசூட்டு விழா மரபையும் அதில் அவர் நாட்களுக்குள்ளாக ஏற்பட்டு வந்திருந்த மாறுதலின் சாயலையும் நமக்கு ஒருங்கே நயம்பட இணைத்துக் காட்டியுள்ளார். 'வெண்ணெய் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி' என்ற அவர் பாடல் வரியில், அவரை ஆதரித்த புரவலரான வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் வேள் மரபு அல்லது வேளாள மரபின் முன்னோரே தம் பழைய மரபுரிமையின் மதிப்பை விடாமல் மணிமுடி எடுத்துக் கொடுக்கின்றனர். ஆனால் சூட்டவில்லை! புதிய வகுப்பினரான வசிட்டரே அதை அவர்களிடமிருந்து அமைச்சர் சுமந்திரர் கைப்பட வழங்கிச் சூட்டுவதாகக் கவிஞர் முடிக்கிறார். புதிய மரபினரின் அந் நாளைய புதிய அரசியல், சமுதாயச் செல் வாக்கை 'வசிட்டனே' என்ற சொல்லில் கம்பநாடரே பயன்படுத்தும் 'ஏ'காரம் தொனிப்படுத்திக் காட்டுகிறது.