உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118 ||

அப்பாத்துரையம் - 14



) ||-


மூன்றாம் தளத்தில் பல்லவர் காலத்தை ஒட்டி (கி.பி.3-6ஆம் நூற் றாண்டுகள்) முடிமன்னர் மரபுகளுக்குப் பேராதரவாக முடி மன்னராலேயே பழைய ஆட்சி வகுப்பினின்று பிரித்தெடுத்து உயர்த்தப்பட்ட புதிய வகுப்பினர், நாளடைவில், மன்னர்களையும் நாட்டாட்சி அயலாட்சி மரபுகளையும் ஆக்கவும் அழிக்கவும், ஏற்றவும் இறக்கவும், ஆட்டிப் படைக்கவும் மாற்றவும் வல்லமை பெற்றவராயிருந்தனர்.அயல் மரபாட்சி அயலாட்சிக்காலங்களில் இது மேலும் வளர்ந்தது. இந்திய தேசியத்துக்கே பல வகைகளில் புது வழி காட்டிச் சென்ற வீர சிவாஜியின் (கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டு) காலத்துக்குள், இந்துப் பேரரசே அமைத்துவிட்ட அம் மக்கட் பெருந் தலைவனுக்கு மொகலாயப் பேரரசர் வகித்த (சக்கரவர்த்தி அல்லது சம்ராட் என்ற) பட்டமோ, அரச மரபினன் (இராசபுத்திரருக்கு அளிக்கப்பட்ட சத்திரியன் என்ற) உரிமையோ அவற்றிற்குரிய தெய்விக ஒப்புதலோ மறுத்து விடும் அளவுக்கு அவர்கள் ஆற்றலும் பேரவாவும் வளர்ந்துவிட்டன. வீர சிவாஜிக்குப் பின் வல்லமைச்சர் (பேஷ்வா) என்ற முறையில் அவர்களே ஆட்சியைக் கைப்பற்றி, அயலாட்சிக் காலத்தின் நடுப்பகுதி (1857) கடந்தும் இந்தியாவின் பெரும் பரப்பிலும் அரசர், பேரரசாக அல்லது அமைச்சராக ஆண்டனர்.

வேளிர் மரபில் வந்த ஆய்வேள் ஆட்சியாக மட்டுமின்றி, அதன் மலர்ச்சியாக17ஆம் நூற்றாண்டு வரை குடியாட்சியாகவே (எட்டு வீட்டுப் பிள்ளைமார் ஆட்சியாகவே) நடைபெற்ற திருவாங்கூர் ஆட்சியை, அதன் வல்லரசரான மார்த்தாண்ட வர்மன் மரபினர் அயலாட்சி ஆதரவு பெற்றுப் புதிய வகுப்பினரின் நலங்களுக்கே முதலிடம் கொடுத்த ஆட்சியாக மாற்றி ஆண்டனர். ஆட்சியின் இத் தனிச் சலுகைகள், 20ஆம் நூற்றாண்டில் பேரமைச்சராகவும் அரசத்துணைவராகவும் நாடாண்ட பேரறிஞர் வயவர் சி.பி. இராமசாமி ஐயரின் ஆட்சிக்காலத்திலேயே அகற்றப்பட்டன.

இந்திய வரலாற்றில் இரண்டாவது மூன்றாவது தள ஊழிகளில் காணப்படத்தக்க புரட்சிகரமான இந்த மாறுபாடு களையெல்லாம் ஒருபுறம் வேள் என்ற சொல்லின் புதுச் சொல் விரிவு, புது மரபு விரிவு ஆகியவையே, வரலாற்றில் ஓட விடப்படும் ஒரு வண்ணத்திரைப்படம் போல நமக்குக் காட்டுகின்றன.