உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 141

எல்லையிலும் சரி (மலையாளம்-வெள்ளாளர்; தெலுங்கு- கன்னடப் பரப்பு: வேளமர்; கன்னடப் பரப்பு: Belgaum, Sravana Belgola; பல்லாளர் என்ற மன்னர் மரபுப் பெயர், கவுண்டர் என்பதன் திரிபாகிய கௌடா) அதற்கு அப்பாலும் சரி, வேளாண்மை என்ற தமிழ்ச் சொல்லின் இந்த மரபு மலர்ச்சி, அதற்குரிய பொருள் மலர்ச்சி, பண்பு மலர்ச்சி ஆகியவை சென்றெட்டவில்லை என்பது தெளிவு. பிற்பட்ட இலக்கண மரபில் மருதநிலத்தைக் கடைநிலம் என்று வகுத்து வேளாளரையும் கடையர் (பெண்பால்- கடைசியர்) என்று குறித்துச் சூத்திரர் என்ற சொல்லுடன் ஒன்றுபடுத்திய மூன்றாம் ஊழியின் தென்னக மரபே, வேள் என்ற இச் சொல்லும் அதன் விரிவு மரபுகளும் வடபால் வழங்காமல் தடுத்துள்ளது என்னல் தகும். கேரள மாநிலத்திலும் தமிழிலும் அதை வெள்ளாளர் (வெள்ளத்தை ஆள்பவர் என்ற புதுமரபுப் பொருளுடன்) திரித்து வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன.

இது மட்டுமன்று.

வயவர் சி.பி.

பேரறிஞரும் பெருந்தலைவருமான இராமசாமி ஐயர் சுட்டியுள்ளபடி, இந்தியாவிலோ நாகரிக உலகிலோ, ஆட்சி மரபையும் வீரமரபையும் உயர் மரபுகளாக மதிப்பது போல, உழவு மரபு, தொழில் மரபு, வாணிக (வட்டி) மரபு ஆகியவற்றை மதித்ததில்லை. இதற்கு மாறாகத் தொன்று தொட்டே இவற்றை, உயர்வாக மதித்த இனம் தமிழினம் (அடுத்த படியாக ஓரளவில் யூதர், பார்சி இனம்) மட்டுமேயாகும். (கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை கிறித்துவ இசுலாமிய மரபுகள் வட்டித் தொழிலை எதிர்த்ததனாலேயே மேலையுலகில் யூதரும், நடுவுலகில் பார்சிகளும், இந்துக்களும், இந்தியாவில் மார்வாடிகள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஆகியோரும் பிறரும் மட்டுமே இத் துறையில் தனியாட்சி நடத்தினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்). இசுலாமிய உலகில் மட்டுமின்றி இசுலாமிய ஆட்சிக் கால இந்தியாவில் கூட, வட்டித் தொழில் பார்சிகள், இந்துக்கள் கையிலேயே இருந்தது.

வேளாண்மை என்ற சொற் பொருள்மரபு மலர்ச்சியுடன் கூடவே வேளாண்மையின் முற்பாதி மலர்ச்சியை மட்டுமன்றிப் பிற்பாதி மலர்ச்சியையும் தற்காலத் தமிழக மண்டலங்களான