உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
142 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


பாண்டி மண்டலம் (தற்காலக் குமரி மாவட்டம், இதனுள் ளடங்கிய வேள்நாடு என்னும் பழம் பிரிவே), சோழ மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் (மூன்று வேள் நாடுகளைக் கொண்டது) ஆகிய மண்டல மரபுகளும் தெளிவுபடக் காட்டுகின்றன. இம் மண்டலங்கள் ஒவ்வொன் றிலுமே வேளாள மரபுகள் தனி மரபாகவோ, பல மரபு களாகவோ, நாட்டு மக்களிடையே சிறுபான்மையினராகவோ, பெரும்பான்மையினராகவோ, நாட்டு மக்கள் பொதுச் சமுதாய வாழ்வுடன் ஒட்டியோ ஒட்டாமலோ வாழ்கின்றனர். ஆனால், கொங்கு மண்டலம் ஒன்றில் மட்டுமே (ஓரளவு நாஞ்சில் நாட்டிலும்) வேளாள மரபு நாட்டு வாழ்விலிருந்து பிரிக்க முடியாத நிலையில் நாட்டுப் பெயரே தாங்கிக் கொங்கு வேளாளர்-கொங்கு வேட்டுவர் மரபாக இயங்குகிறது. வேளாளர்-வேட்டுவர் இணைமரபன்றி வேறு பழமையான தனி வேளாளர் மரபு இம் மண்டலத்தில் இன்றும் பெரிதும் இடம் பெறவில்லை. மற்ற எந்த மண்டலத்தின் வேளாளரையும் விட இக் கொங்கு வேளாளரே தம் தாய்நிலத்தில் பெரும்பான்மையினராக, தாய் நிலத்தின் ஒரே வேளாண் மரபாக, தாய் நில வாழ்வுடன் ஒன்றிய பழமையும் மரபும், மரபு மலர்ச்சியும் உடையவராக நிலவுகின்றனர்.

இது மட்டுமோ?

பிற மண்டலங்களிலுள்ள வேளாளர், வேளாண்மை மலர்ச்சியில் பிற்பாதிக் கூறாகிய உழவாண்மையைப் பேணிய அளவில், அதன் முற்பாதிக் கூறாகிய (தென்னக இந்திய நாகரிக உலக மரபுகள் பேணி வந்துள்ள) வீர மரபை முதனிலையாக அதாவது மரபு மலர்ச்சியாகப் பேணி வந்துள்ளனர் என்று கூறமுடியாது. அது தொடர்பான சமய சமுதாய வினைமுறை சார்ந்த ஆட்சி மரபைக்கூட நாட்டு மரபாகப் பேணி வந்துள்ளனர் என்று கூற இயலாது. ஏனெனில், வேளாளர் மரபுகளிடையே மட்டுமன்றி சாதி மரபுகளிடையிலேயே கொங்கு வேளாளர்-வேட்டுவர் மரபு ஒன்று மட்டுமே வீரமரபும், குடியரசு மரபில் வந்த முழுமை ஆட்சி மரபும், ஒத்திசைவு மரபாகிய நாட்டு வாழ்வு மரபும் ஒருங்கே காத்துப் பேணி வந்துள்ளது என்று

காணலாம்.