உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 143

இவ்வாறு, தமிழகத்தின் வேறு எந்த வேளாளர் மரபினரையும்விட, இந்தக் கொங்கு வேளாளர் மரபே, தாய்நிலம் அதாவது தாய்நில வாழ்வுடன் ஒட்டிய தாயக மரபாக நிலவுகிறது. மண்டலங்களிடையேயும் கொங்கு வேளாளர் மரபினுக்கும் கொங்கு மண்டலத்துக்கும் உரிய இதே தேசிய மரபுப் பிணைப்பு பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பிற மண்டலங்களுக்கு அறவே கிடையாது. தொண்டை மண்டலத்தையோ, சோழ மண்டலத்தையோ, பாண்டி சேர மண்டலத்தையோ தாயகமாகக் கொண்ட வேளாள மரபு என்று கூறத்தக்க எந்த வேளாண் மரபையும் (நாஞ்சில் நாட்டு வேளாளர் மரபு, நாட்டுக்கோட்டை வணிகர் மரபு நீங்கலாக) நாட்டு வரலாறுகளோ, மரபு வரலாறுகளோ கூட அறியமாட்டா!

கொங்குநாட்டு வேட்டுவப் பெருங்குடி மக்களே அந் நாட்டின் (பண்படா எயினர் அல்லது வேடர் மரபில் வந்த) தொல் பழங்குடிகள் என்றும், கொங்கு வேளாளர் சோழர் ஆட்சிக் காலங்களில் (கி.பி. 9 அல்லது 10-12ஆம் நூற்றாண்டு களில்) சேர பாண்டிய நாடுகளிலிருந்தோ, சோழ நாட்டிலிருந்தோ வந்து குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட மரபினரே என்றும் வரலாற்றாராய்ச்சியாளர் பலர் கருதியுள்ளனர்; கருதி வருகின்றனர். வேளாளர் குடியேறும் அல்லது குடியேற்றப்படும் வரை கொங்கு நாடு, சிறப்பாக இன்றைய கொங்கு நாட்டின் வடபெரும்பகுதி வளமற்ற பாலை, குறிஞ்சி, முல்லைப் பரப்பாகவும், பண்பற்ற பரப்பாகவுமே நிலவி வந்ததென்றும் அவர்கள் கொள்கின்றனர். இக்கருத்து வரலாற்று மெய்ம்மை நிலைகளுக்கும், மெய் மரபுகளுக்கும் எவ்வளவு நேர் எதிர் முரணானது என்பது மேலே விரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முடிவுகளுக்கு அவர்கள் பிற வரலாற்று ஆதாரங்களுடன் மரபு வரலாற்று ஆதாரங்களையும் அணிமைக் கால (கி.பி. 15- 16ஆம் நூற்றாண்டுக்குரிய) வேளாளர் - வேட்டுவர் மரபின் உட்பூசல் பற்றிய மக்கட்பாடல்களையும் ஆதரவாக எடுத்துக் காட்டுகின்றனர்.

மேலீடாகப் பார்ப்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர் கருத்தும் மரபு வரலாறுகளின் கருத்தும் ஒன்றே என்று தோற்றக்கூடும். ஆனால், இது போலித் தோற்றமே யாகும். ஏனெனில், சாதி மரபு