உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176 ||

அப்பாத்துரையம் - 14



()


அவர்கள் சேரரை எதிர்த்தனர். சேரர் படைத் தலைவன் (வட கொங்கக்) குதிரைமலை வேளாகிய பிட்டங்கொற்றன் பல கடும் போர்களில் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால், கோசர் கையே வலுத்திருந்தது. அவர்கள் வாட்டாறு, செல்லூர் ஆகிய போர்க் களங்களில் அதியமான் எழினியை முறியடித்த துடன் பிந்திய போரில் அவனைக் கொன்றொழித்து முன்னேறினர்.

வெற்றிவீரராகிய கோசர் இப்போது தமிழக மூவரசு நாட்டு எல்லைக்குள்ளேயே வந்துவிட்டனர். போரின் போக்கிலும் இப்போது மாறுதல் ஏற்பட்டது. பாண்டி நாட்டு எல்லை யிலுள்ள மோகூரை அவர்கள் தாக்க முற்பட்டபோது, அதன் வேள்படை அவர்களை எதிர்த்துத் தாக்கி வெற்றி கண்டது. அதன்பின் அவர்கள் சோழ நாட்டெல்லையில் அழுந்தூரர் வேள் திதியனை எதிர்க்கத் திரும்பியபோது, அவ்வேளிர் தலைவன் அவர்களை முறியடித்ததுடன் நில்லாமல், அவர்களின் மூலதளமாகிய பாழிக் கோட்டை வரை அவர்களைத் துரத்தியடித்தான்.

கோசரின் தென்திசைப் போரின் இக் கட்டத்திற்குள் மோரியரின் கலிங்கப் பெரும்போர் அதன் இறுதிக் கட்டத்தை அணுகிவிட்டது. இந் நிலையில் மோரியப் பேரரசின் ஒரு படைப் பிரிவே கோசருக்கு உதவியாகத் தெற்கே அனுப்பப்பட்டு, மேலே சங்கப் பாடல்கள் தெரிவித்துள்ள நிலையில் நேரடிப் பெரும் படை எழுச்சிகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம் முன் என்றும் கண்டிராத இப்பெரும் படையெழுச்சியின் ஆரவாரம் ஏறத்தாழ முதன் முறையாகத் தமிழக முழுவதையுமே ஒன்று படச் செய்தது. அந் நாளைய தமிழகப் பேரரசனான சோழன் இளஞ்சேட் சென்னியின் தலைமையில் தமிழக அரசர்கள் வேளிர்கள் ஆகிய அனைவரும் அணிவகுத்து நின்றனர். இத் தேசியப் பெரும்படை மோரியப் படைகளை எங்கும் முறியடித்து, அவற்றின் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே தரைமட்டமாக்கி அழித்தது.

'எழூஉத் திணிதோள் சோழர் பெருமகன்

விளங்கு புகழ் நிறுத்த இளஞ்சேட்சென்னி செம்புறழ் புரிசைப் பாழி நூறி'

(அகம்)