உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 177

எனச் சங்கப் புலவர் இடையன் சேந்தன் கொற்றனார் இவ் வெற்றியைப் பாராட்டினார். வரலாற்றுப் புகழ்பெற்ற இப்பெரும் போரைச் செருப்பாழி (செரு - போர்) என்றும், இதன் புகழ் வெற்றி கண்ட சோழனைச் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் வரலாறு போற்றுகிறது.

று

இப்போரின்போது ஏற்பட்ட மூவரசர் (வேளிர்) கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததாகவும் அதன் பின் தன்னால் அழிக்கப்பட்டதாகவும் பின்னாளைய கலிங்கப் பேரரசன் காரவேலன் தன் ஹத்திகும்பா வெற்றித்தூண் (கி.மு.163 அல்லது 153) கல் எழுத்தில் கூறுகிறான். ஆனால், அவன் வெற்றி நிலைக்கவில்லை என்பதை அடுத்து வந்த ஆந்திரப் பேரரசின் வரலாறும் அதனுடன் சேரன் செங்குட்டுவன் கொண்ட நட்புறவுக் கூட்டும் காட்டும் (இது மேலே கண்ட து மேலே கண்ட இரண்டாம் திருப்பத் தொடக்கம் ஆகும்.)

கலிங்கப் பெரும் போரின் (கி.மு. 271-264) ஒரு பகுதியான இம் மோரியரின் தமிழகப் போராட்டம் கி.மு. 268-264 ஆகிய ஆண்டுக் காலத்திற்குரியது என்பதை மேற்கண்ட காரவேலன் கணிப்பு காட்டுகிறது. இதன் முடிவில் அசோகன் தமிழக அரசுகளுடன் செய்துகொண்ட நேச ஒப்பந்தத்தின்படியே, தன் சார்பில் போரிட்ட கோசரை மற்றத் தமிழக அரசுகளுடன் நட்புறவு கொள்ளும்படி செய்தான் என்று கருதலாம். ஏனெனில், தமிழக நேச வல்லரசுகளை அவன் கல்வெட்டுகள் பாண்டிர், சோழர், கேரளபுத்திரர் (சேரர்), சத்தியபுத்திரர் என்று நான்காகக் குறிக்கின்றன. இது கொங்குச் சேரர் மரபு தோன்றுவதற்கு சில பல நூற்றாண்டுகள் முற்பட்ட செய்தியாதலால், சத்தியபுத்திரர் என்ற பெயர் கொங்குச் சேரரைக் குறிக்க முடியாது. இது பொதுவாகக் கொங்கரையோ, பிந்திய காலங்களில் சத்திய மங்கலம் என்ற நகர்த் தொடர்புடைய கட்டி மரபினரையோ குறித்ததாகும் என்பர் புலவர் குழந்தை, ஆனால், அதுவும் மிகப் பிற்பட்ட காலச் செய்தி ஆகும். தவிர, சேரருடனும் சோழ, பாண்டியருடனும் ஒப்பாகக் கூறப்பட்ட இவ்வல்லரசு மரபினர் முடியரசல்லராயினும் அவருடன் ஒத்த ஆற்றல் சான்ற வல்லரசரான கோசரே என்று துணிந்து கூறலாம்.