உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
180 ||

அப்பாத்துரையம் - 14



மேலே குறித்துள்ளபடி, வரலாற்றாசிரியர் பலர், சேரரையும் கொங்குச் சேரரையும் ஒரே மரபினர் என்று கொண்டிருந்தனர். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியே இரு ரு மரபுகளின் வேறுபாடு கண்டவர் ஆவர். ஆனால், இரு சார்பினருமே, கொங்கிளங் கோசர் என்பவர் சேரர் கீழோ, கொங்குச் சேரர் கீழோ பணியாற்றிய உயர் பணியாளர்கள் என்றே கொண்டனர். அத்துடன் இரு சாராருமே கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுமலையிலுள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலின் தெய்வப்படிவமே பின்னாட்களில் அவ்வாறு கருதப்பட்ட கண்ணகிப் படிவம் என்றும், கொங்கு நாட்டில் கொங்கிளங் கோசரால் விழாவெடுத்து நிறுவப்பட்ட கோயிற் படிவம் அதுவே என்றும் கருதியுள்ளனர். இவ்வகையில் இரு சாராருக்கும் டையேயுள்ள வேறுபாடு மிகச்சிறிதே. முந்தியவர்களில் பலர் அரும்பதவுரையாசிரியரின் உரைக் குறிப்பைப் பின்பற்றிச் சேரன் செங்குட்டுவன் விழாவெடுத்த சேரநாட்டுப் பகுதியே திருச்செங் கோடுதான் என்று குறிக்கின்றனர். (இது கொடுங்கல்லூர்ப் பகவதியம்மன் கோயிலே என்பர் கேரள மாநில அறிஞர்). பிந்தியவரோ, கொங்கு நிலவியல் நன்கறிந்து இதனை மறுத்துரைக்கும் கொங்கு நாட்டவரான அடியார்க்கு நல்லார் உரையைப் பின்பற்றி, இது கொங்கு நாட்டில் கொங்குச் சேரர் சார்பில் அவர்களின் கீழ் உயர் பணியாளராகச் செயல்பட்ட கொங்கிளங் கோசர் நிறுவியதே எனக் கொள்கிறார்.

பெருஞ்சேரன் விழாவுக்கு விருந்தினர்களாக வந்தவர்களுள் சோழ பாண்டியர்களோ, கொங்குச் சேரரோ சிறப்பிடம் பெற்றதாகக் குறிக்கப்பட வில்லை. தமிழகப் பெரும் பேரரசனாக அன்று விளங்கிய சேரன் செங்குட்டுவனுக்குச் சரிசமமாகக் கருதப்பட்ட வல்லரசுகளே அவனுக்குத் தகுதி வாய்ந்த நண்பர்களாகவும் விருந்தினர்களாகவும் கருதப்பட்டனர் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வல்லரசுகளுள் கொங்கு நாட்டுச் சார்பில் வந்த ஒரே வல்லரசாகத்தான் கொங்கிளங் கோசர் குறிக்கப்படுகின்றனர். விழாக்காலத்தில் கொங்குச் சேரர் ஆட்சி மரபுத் தொடர்பில் அரசேயில்லாத ஓர் இடைவெளியோ, அல்லது இடை டை வீழ்ச்சியோ அல்லது பிற அவல நிலைகளோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஏற்கெனவே மேலே சுட்டியபடி, கோசர், கொங்கிளங் கோசர்