உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 181

என்ற பெயர்களில் உள்ள பன்மை வழக்கு, இளமை (வீரமரபு, குடியரசு மரபு சுட்டிய குறிப்பு) ஆகியவையும், கொங்கிளங் கோசர் என்ற பிந்திய பெயரே இங்கே சுட்டப்பட்ட நிலையும் பிறவும் அவர்கள் இச்சமயம் கூட்டுக் குடியரசாகவும், பேரரசு வல்லரசாகவும், ஒரு வேளை தென் கொங்குப் பகுதியும் மேல் கொங்கும் வடகொங்கும் சேர்த்தாண்ட கொங்கு நாட்டு ம் ஆட்சிக்கே யுரியவர்களாகத் திகழ்ந்திருந்தனர் என்பது காட்டும்.

திருச்செங்கோடு அந் நாளில் இக் கோசரின் ஆட்சிக்கு உட்பட்டதாயிருந்தது என்று கொள்ளக் கூடுமானால், அவர்கள் நிறுவிய கோயிலும் அதுவாகவே இருத்தல் கூடாததன்று. ஆயினும், அதனை அவர்களின் மூலத் தாயகத்துக்கு அருகாமையில் மேல் கொங்குப் பகுதியிலேயேயுள்ள மங்களூர் அல்லது மங்கலாபுரம் போன்ற இடங்களில் காண எண்ணுவதே பொருந்துவது ஆகலாம். பழந் தமிழ்த் தெய்வமாகிய தமிழன்னை மரபில் வந்த புது மரபான கண்ணகியின் கன்னி இளமை (நித்திய கல்யாணித் தன்மை) தெய்வத் தன்மை ஆகியவற்றை 'மங்கலா' என்ற பெயர் மிகச் சிறப்புறக் குறிப்பதாகும்.

பண்டை வடகொங்கு நாட்டுப் பரப்பில் குதிரைமலை என்ற வேள் நாட்டைப் பற்றி நாம் தொடர்பற்ற சில துண்டுத் துணுக்கான செய்திகளை மட்டுமே அறிகிறோம். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கோசர்-சேரர் போராட்டத்தில் குதிரைமலை வேளான பிட்டங் கொற்றன் சேரர் படைத் தலைவனாயிருந்து பல கடும் போர்களாற்றியும் அவர்கள் வெற்றிப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற செய்தி மேலே கூறப்பட் டுள்ளது. இவனை 'வானவர் மறவன்' (வானவர் - சேரர்; மறவன் - வீரன்,படைத்தலைவன்) என்றும், 'கோதை நண்பன்' (கோதை - சேரன்) என்றும், விழுமிய ஈகைக் குணமுடையவன் என்றும் சங்கப் புலவர்கள் பாராட்டியுள்ளனர். அவன் மலையில் குறவர் காட்டுப் பசுவின் பாலில் தினை கரைத்து உண்டனர் என்றும் தெரியவருகிறது. (காட்டுப் பசுவைப் பழக்கி நாட்டுப் பசுவாகப் படைத்துருவாக்கி உலகுக்களித்தவர் கொங்கு நாட்டுத் தமிழரே யாதல் சாலும் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ளது.)

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் காலத்தில்சேரர் படைத்தலைவனாயிருந்த வெளியன் வேள்மான் ஆய்எயினன்