உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 197

ஒன்பது நூறாயிரம் காணம் (பொற்காசு) கையுறையாகக் கொடுத்தான். ஆனால், வேளிரையும் அவர்களை விழுங்கிய மன்னரையும் ஒரே நிலையில் வைத்துப் பாடிய தமிழ்ப் புலவரின் தமிழ்ப் பண்பு மரபு எழுவர் என வள்ளல்களைத் தொகைப் படுத்திய காலத்தில் இம்முடி மன்னர் ஒருவரையேனும் அந்த வள்ளல்களின் வண்மைக்கு நிகராகக் கொண்டு உளப்படுத்த வில்லை. வள்ளண்மையின் முழுநிறை உருவங்களாக அவர்கள் எழுவரையும் வேளிரிடையேதான் கண்டனர். முடியரசர் பேரரசரின் ஆரவாரப் பரிசில்களை விட, மக்களுடன் மக்களாக, ஊடாடி வாழ்ந்த குடியரசராகிய வேளிரின் பரிசில்களே பழந்தமிழர் உள்ளங்களில் ஆழப்பதிந்து தமிழ்ப் பண்பலைகளைத் தூண்டின என்று காணலாம்.

கால

முடியரசு க் கால மூன்றாம் தள ஊழியின் வண்ணத்தின் மருட்சியுட்பட்ட பிற்கால, அணிமைக்காலத் தமிழர் (ஒரு வேளை பாரதக் கர்ணன் ஒருவன் நீங்கலாக) புராணக் கற்பனைக்குரிய முடியரசரையே முந்து புகழ் பெறும் முதலெழு, இ டையெழு வள்ளல்களாகத் தொகுத்து, தமிழ் மரபுக்கும் தமிழர் வரலாற்றுக்குமேயுரிய இத்தமிழ் வள்ளல்கள் எழுவரையும் ஒருங்கே கடையெழுவள்ளல்கள் ஆக்கி வரிசை திருத்தினர்!

பண்டைத் தமிழர் குடியரசுமரபுப் பண்பின் பெருமையையும் உயர்ச்சியையும், வேளிர் வரலாறுகளும் அவர்களிடையே புலவர்களால் பொறுக்கியெடுத்துத் தரப்பட்ட வள்ளல்களின் வரலாறுகளும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவ்வள்ளல் களின் வரலாற்றில் செம்பாதிக்கு மேற்பட்ட பகுதி கொங்கு நாட்டுக்கு உரியது என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

2) சேரரும் கொங்குச் சேரரும்: வீட்டரசர் கட்டி யெழுப்பிய நாட்டரசுக் கோட்டை

'சிலப்பதிகாரச் செய்தி' என்ற தம் ஆய்வேட்டில் ஆசிரியர் போ. ரா. குருசாமி காட்டியுள்ளபடி, முத்தமிழ் நாடகக் காப்பியமாக மட்டுமன்றி மூவேந்தர் நாட்டுத் தேசியக் காப்பியமாகவும் திகழும் சிலம்பு சித்திரிக்கும் தமிழக ஊழ் நம் கண் முன் மூவரசு நாடுகளின் மூன்று போகூழ்களாகவும், மூவரசு கடந்த ஒரு தமிழக (குடியரசு மரபுக்குரிய கொங்குத் தமிழக)