உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
198 ||

அப்பாத்துரையம் - 14



||- ஆகூழாகவும் காட்சியளிக்கின்றது. தமிழ் வளர்த்த பாண்டியர்கள் அத் தமிழ் கடந்து தமிழ் மக்கள் மரபின் நீதியைக் காண்பதிலும், கலை இன்பம் வளர்த்த சோழர்கள் அக் கலைகளைக்கடந்து கலைஞன் வாழ்க்கை நலத்தைக் காப்பதிலும், வீரம் வளர்த்த சேரர் அவ் வீர வெற்றியிடையே தம் மரபின் அறம், அதாவது, வீரத்தின் இலக்காகிய மக்கள் தன்னாண்மை வாழ்வைப் பேணுவதிலும் வழுவினர். இவையே மூவரசுகளின் போகூழ்கள் அல்லது ழவூழ்கள். இம்மூன்றனுள்ளும் அடிப்படையானது குடும்ப வாழ்வு நலத்தையே அடித்தளமாகவும் மனித ன வாழ்வு நலத்தையே (Humanism) இலக்காகவும் கொண்ட குடியரசு அல்லது குடியாட்சிப் பண்பு ஆகும். இதுவே கண்ணகியின் கற்புப்பண்பு என்னலாம். சிலம்பையும் சேரரையும் பொறுத்த மட்டில், தமிழினத் தேசிய மாக்கவிஞன் இளங்கோ தம் காப்பியத்தில் பேரரசி வேண்மாளின் கடைக்கண் வீச்சு மூலமும் அவ்வேள் புல மரபுக்குரிய அப் பேரரசியின் முத்து மணியுரைகள் மூலமும், மாடலன் அறிவுரை மூலமும், கற்புக் கடவுள் காட்சி மூலமும், அக் கற்புக் கடவுள் வாழ்த்துரை மூலமும் இதனை விளக்கிக் காட்டியுள்ளார். கண்ணகிக் காப்பிய வாயிலாகத் தமிழகத்தின் ஆகூழ் என அவர் சுட்டிக்காட்டும் காப்பியப் படிப்பினை அல்லது நோக்கு இதுவே! (தமிழ்க் கற்பு என்பதே பண்டைத் தமிழ்க் குடியரசுப் பண்பின் அடிப்படை ஆகும்.)

கொங்குச் சேரப் பேரரசினைக் கட்டியெழுப்பியவர் கொங்குச் சேரரே. ஆனால், அதற்கு அடிக்கல் நாட்டியவர் சேரர். குடியரசுப் பண்பை நாட்டரசுப் பண்பாக்கியவர் கொங்குச் சேரரென்றால், மூவரசரிடையே (மேலே சுட்டியுள்ளபடி) அதனை வீட்டரசுப் பண்பாகப் பேணியவர் சேரரே யாவர். கொங்குப் பேரரசை நாம் இதனாலேயே வீட்டரசர் கட்டியெழுப்பிய நாட்டரசுக் கோட்டை என் று வேண்டியவர்கள் ஆகிறோம்.

கூற

தென்னக, இந்திய, உலக வரலாற்றில் தேசிய ஆட்சி முறை மரபிலும் (National System of Civil Service), கடலாட்சி மரபிலும் (Maritime and Naval Power) சேர மரபு, கொங்குப் பேரரசு மூலம் சோழப் பேரரசு மரபுக்குக் காட்டிய வழியே விசயநகர, மராத்திய, மொகலாய மரபுகள் மூலம் இன்றைய இந்தியாவும் அகல் உலகும்