உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
206 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


தேவியார் என்ற இரண்டு ஒரே குடிமரபுப் பெண்களை மணந்து அவனுடன் மேலும் நெருங்கிய உறவுடையவனாய்த் திகழ்ந்தான் என்பது மேலே சுட்டப்பட்டது. ஆதன் என்பதே இவன் இயற்பெயர். கடும்போர்கள் பல ஆற்றியதனாலேயே இவன் கடுங்கோ எனப் பெயர் பெற்றிருந்தான் என்று கருதலாம். ஏனெனில், தன் ஆட்சியை விரிவுபடுத்துவதிலேயே அவன் தன் வாழ்நாள் முழுவதும் கழித்தான் என்று தோன்றுகிறது.

இப் பேரரசனுக்கு 'மாந்தரன்' என்றும் ஒரு பட்டப் பெயர் உண்டு. பின்னாட்களில், இவன் பெயரனும் இதே பெயர் பெற்றிருந்ததனால் வரலாற்றில் இவனை நாம் முதலாம் மாந்தரன் என்று குறிப்பிடலாம்.

பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து, செல்வக் கடுங்கோவின் புகழ் பாடுவதேயாகும். அதனைப் பாடியவர் நல்லிசைப் புலவர் என்றும், புலனழுக்கற்ற அந்தணாளர் என்றும் சங்கப் புலவர்களாலேயே சிறப்பிக்கப்படும் பெருமையுடைய கபிலர் பெருமான் ஆவார், தொடக்கத்தில் பாரி வள்ளலின் அவைப் புலவராயிருந்த அவர், அப் பெரு வள்ளல் வேள் இறந்தபின், இப் பேரரசன் ஆதரவையே நாடி வந்தார். போர்க்களத்திலேயே வாழ்நாள் கழித்த அவனை அவரும் போர்க்களப் படை வீட்டிலேயே வந்து காண வேண்டியதாயிற்று. அச் சமயம் அவன் தோளும் மார்பும் முற்றிலும் பழம்புண் தழும்புகளிடையே புதுப்புண் காயங்களும் நிரம்பிக் கோரக் காட்சி அளித்திருந்தன. எனவே, புலவர் முன் அவன் வரும் போது, அவற்றை முற்றிலும் சந்தனக் குழம்பால் பூசி மறைத்துக்கொண்டிருந்தான். பதிற்றுப் பத்திலேயே புலவர் பெருமான் இதனைக் குறிப்பிட்டு,

‘எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்'

என்று அவனைப் பாடுகிறார்.

இப் பத்தினைப் பாடியதற்காகக் கபிலர் பெருமானுக்கு இப் பேரரசன் நூறாயிரம் காணம் (காணம்-அக்காலப் பொற்காசு) வழங்கிய துடனன்றி, அவருடன் நன்றா என்னும் குன்றின் மேல் ஏறி நின்று, புலவர் கண்ணில் பட்ட எல்லா ஊர்களின் வருவாய்களையும் பரிசாக வழங்கியதாக அப் பத்தின் பதிகம்