உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
216 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


இளஞ்சேரல் இரும்பொறை வெற்றிச் சின்னமாகக் கைப்பற்றி அதனைக் கருவூரில் நிறுவி விழா எடுத்தான். கொங்குச் சேரப்

பேரரசின் இந் நீள் பெரும்புகழை

'அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கமர்ந்த

வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ

ஆய்ந்த மரபில் சாந்திவேட்டு'

(பதிற்றுப்பத்து)

‘சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து

(சிலப்பதிகாரம்)

மதுக் கொள் வேள்வி புரிந்தோன்!'

என்று சங்கப்பாடலும் சங்ககாலச் சிலம்பும் ஒருங்கே முழங்குகின்றன.

அங்கே சிலம்புக் காப்பியம் இளஞ்சேரல் இரும்பொறையை வேள்வி புரிந்தோன் என்று கூறும் தொனியும் அதன் இறந்த காலமுமே, சேரன் செங்குட்டுவன் (கி.பி. 130-135) ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கண்ணகி விழாவுக்கு (கி.பி. 180ஆம் ஆண்டுக்கு) நெடிது முன்னதாகவே இப்பேரரசன் இறந்து விட்டான் என்பதைக் காட்டுகின்றன. தவிர, இக்கூற்று அந்த விழாவுக்கு முற்பட, அதற்குத் தூண்டுதலாகவே, சேரன் செங்குட்டுவனின் போர் வெறியைத் தணியச் செய்து அற ஆர்வம் தூண்டும் முறையில் அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் வகையிலே மாடலனால் கூறப்படுகிறது. அசோகன் புத்த நெறி தழுவுவதற்கு அவனது கலிங்கப் போரின் குருதிக் களரி பின்னணியாயமைந்தது போல, கண்ணகி விழாவுக்கும் மாடலன் அறிவுரைக்கும் உரிய பின்னணி, சிலம்பே குறிக்கும் சேரன் செங்குட்டுவனின் கொங்கர் செங்களம் என்ற இடத்தில் நிகழ்ந்த செங்குருதிப் போரே என்னல் தகும். இது கீழே விரிக்கப்படுகிறது.

யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 170-190), பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சி இறுதியிலே சிறுவனாயிருந்த அவன் புதல்வனே என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கருதியுள்ளார். இவன் ஆட்சிக் கால அளவும் அடுத்த பேரரசன் ஆட்சிக் கால அளவும் இருபது இருபது ஆண்டுகள் என்பதும், இளஞ்சேரல் ஆட்சியையடுத்து இரண்டும் தொடர்ந்தன