உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 217

(

என்பதும் இதுபோலவே வேறு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் பெரிதும் உய்த்துணரப்பட்ட ஊகங்களே யாகும்.

சதுக்கப்பூதரைக் கருவூரில் கொண்டு வந்து நிறுவிய நிகழ்ச்சிக் காலம் கொங்குச்சேரர், பெருஞ்சேரர் ஆகிய இரு மரபினரின் ஆற்றலும், புகழும் அடைந்த உச்சநிலையைக் காட்டுவது மட்டுமன்று; அதுவே கொங்குச் சேரரின் ஆற்றல் சரியத் தொடங்கிய காலம், அதுவே சேரரின் ஆற்றலுக்கும் முதல் ஆட்டம் கொடுத்த காலம் ஆகும் என்னலாம். ஏனெனில், இதனை அடுத்து எழுந்ததே கொங்கர் செங்களப்போர். இரு சேர மரபுகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தமிழக முழுதளாவிய எதிர்ப்பின் முதல் அலையையே இது காட்டுகிறது. ஒருபுறம், சோழமரபில் செங்குட்டுவனின் மைத்துனர் இடம் பெறாது துரத்தப்பட்டனர். மற்றொருபுறம் கொங்கு நாடெங்கும் வேளிர்கள் பேரரசுக்கெதிராகத் தூண்டப்பட்டனர்; கொங்கர் செங்களப்போரில் சேரன் செங்குட்டுவன் ஆற்றிய வீரச் செங்குருதிப் போராட்டம் தற்காலிகமாக வெற்றியே தந்து அவன் புகழ் நாட்டிற்று என்பது உண்மையே. ஆயினும் கண்ணகி விழா அதன் பேராரவார அதிர்வலைகளை அமைதிப்படுத்தப் பேருதவியா யிருந்தது என்பதில் ஐயமில்லை. பெருஞ்சேரரின் பேரரசு அதே சமயம் கண்டுவிட்ட ஆட்ட அலைவை மறைக்கும் அரசியல் திரையாகவும் அது பயன்பட்டது. இரு மரபுகளின் பின் வரலாறு இவற்றை உணர்த்துகிறது.

கொங்கர் செங்களப் போரில் கோசர் சேரருக்குப் பேராதரவு செய்திருத்தல் கூடும்; கொங்குச் சேரப் பேரரசு பேரளவில் வீழ்ச்சி யுற்றிருக்கக் கூடும். அப் போரை ஒட்டி, அது முதல் கண்ணகி விழாவரையுள்ள காலம் யானை கட்சேய் ஆட்சிக் காலமாயிராமல், அவன் ஆட்சி இடைக் காலமாய் பெருங் கொங்குப் பரப்பில் கோசரே வல்லரசாட்சி பெற்றிருத்தல் ஆகும் என்று கருதலாம்.

கண்ணகி விழாவின்போது கொங்கு நாட்டின் சார்பில் கொங்குப் பேரரசர் இடம் பெறாதது, அதே சமயம் கொங்கிளங் கோசரே கொங்கு நாட்டுச் சார்பில் பெரு மதிப்புடன் இடம் பெற்றது ஆகிய செய்திகள் யானைக் கட்சேயின் கொங்குப்