உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
218 ||

அப்பாத்துரையம் - 14



(

|


பேரரசாட்சியிடையே நிலவிய ஓர் இடைக்கால, அல்லது தொடக்கக்காலச் சூழலே என்று கருத இ டமுண்டு.

கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டுகளில் முன்னர் அரசியல் பேரரசராக ஆண்ட நிலை தகர்ந்து விட்ட நிலையிலும், பாண்டிய மரபினர், புதிய இலக்கியப் பேரரசராகத் தம் மரபுப் புகழ் புதுப்பித்து வாழ்ந்தனர். கடைசிக் கொங்குப் பேரரசர் வாழ்வுகள் இதனை ஒத்தவை. ஆனால், கொங்குப் பேரரசர் இலக்கியப் பேரரசர்களாக மட்டுமன்றி, கொங்கு மக்கள் உள்ளங்களில் அன்பாட்சி நிறுவிய குடியரசுப் பேரரசராகவும் நிலவினர். சங்க காலக் கொங்கு வரலாற்றின் அந்தி நேரச் செவ்வானின் அழகொளிகளாக அவர்கள் ஆட்சிகள் அமைகின்றன. (பாலை பாடிய பெருங் கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ முதலிய அரச மரபுப்புலவர் புகழாட்சி இப் புகழொளிக்கு முன்பின் இடைவெளிகளில் சுடரிட்டவை ஆகலாம்).

செல்வக் கடுங்கோவுக்கும் மாந்தரன் என்ற மறுபெயர் இருந்ததனை ஒட்டியே, புலவர்கள் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு அவன் முகத் தோற்றத்தைச் சுட்டி யானைக் கட்சேய் என்று அடைமொழி சேர்த்து அழைத்தனர் என்னலாம்.

முந்திய கொங்குச்சேரர் ஆட்சிகளைப் போலவே இக் கொங்குச் சேரன் ஆட்சியிலும் போர்கள் பல நிகழ்ந்தன. ஆனால், வெற்றி மேல் வெற்றிகள் எனத் திகழ்ந்த அவ் வரலாற்றிலேயே அவன் ஆட்சி முதல் வெற்றி விரவிய தோல்விகள் வரலாறாகத் தொடர்ந்தன. பேரரசர் வீரம் குறைந்து விடவில்லை. ஆனால், பேரரசுச் சரிவின் வேகத்தைச் சிலகாலம் தடுத்து நிறுத்தவும், அதன் பண்பை வளர்க்கவுமே அது உதவிற்று.

இப் பேரரசனது கன்னிப் போராகவும், வெற்றிப் போராகவும் அதே சமயம் கவிதையஞ் செல்வியை அவனிடம் வரவழைத்த வெற்றிப் போராகவும் அமைந்தது விளங்கில் போரேயாகும். இதுபற்றிய வேறு செய்திகள் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை; கன்னித் தமிழ்க் கொங்கம் ஈன்ற இத் தமிழ்க் கொங்கிளஞ் சேரனுக்குப் போர் வெற்றி குறித்து மகிழ்ச்சி யில்லை. தன் பாட்டன் வெற்றிபாடக் கிடைத்த நல்லிசைக் கபிலனைப் போலவே தன் வெற்றிபாடக் கவிஞன் கிட்ட வில்லையே என்று மட்டுமே அவன் கவலையுற்றதாக