உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 75

தமிழக, இந்தியப் பரப்புகளில் காஞ்சி, உச்சைனி, வைசாலி போன்ற நகரங்களும், தமிழகத்தில் சோழர் காலம்வரை நிலவியிருந்த மணிக்கிராமத்தார், நானாதேசக்குழு, திசையா யிரத்து ஐந்நூற்றுவர் குழு போன்ற உலகநாடுகள் அளாவிய வாணிகக் குழுக்களும் பிற தொழிலமைப்புகளும் உண்மையில் வேள்புல நிலையிலிருந்தும் கூட்டுக் குடியரசு நிலையிலிருந்தும் மேலும் முன்னேறி மலர்ச்சி பெற்று வளர்ந்த தன்னாட்சி நகரங்கள் (City Corporations), வாணிக, தொழில் தன்னாட்சி அமைப்புகள் (Mercantile or Industrial Corporations) ஆகியவையே என்று அறிகிறோம். இவற்றுட் பல இன்று நாட்டுக்கோட்டை வணிகர், செங்குந்தர், கட்டி முதலியார் ஆகியோர் போன்று, குடியரசுமரபு தேய்வுறப் பெற்றுச் சாதி மரபுகளிடையே சாதி மரபுகளாக உறைந்து விட்டன. தவிர, காஞ்சி (தமிழகம்), வல்லபி (குசராத்), நாலந்தா (பீகார்), விக்கிரமசிலா (அசாம்) முதலிய பல்கலைக்கழகங்கள் இதே வேள்புலத் தன்னாட்சி மரபினைப் பின்பற்றி எழுந்த தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களேயாகும்.

கீழே விளக்கப்பட இருக்கிறபடி, பண்டைத் தமிழரசரின் ஆட்சிப் பரப்பும் வேளிர் ஆட்சிப்பரப்பும் தாண்டித் தமிழுலகின் மீதே கலையாட்சியும் இயலாட்சியும் மொழியாட்சியும் இலக்கிய வாழ்வின் ஆட்சியும் பரப்பிய முச்சங்க மரபு என்பது தொல் பழங்காலத்திலேயே முகிழ்த்த இத்தகைய கல்வி நிறுவனம் அல்லது இத்தகைய பாரிய தேசியப் பல்கலைக்கழக அமைப்பே யாகும். நாகரிக உலகெங்குமுள்ள பல்கலைக் கழக மரபுகள் இன்னும் இக் கோமரபு, சங்கமரபு பேணியே வருகின்றன. அவற்றின் வேந்தர், துணைவேந்தர் கோமரபிலும் குடியரசு மரபிலும் வந்தவர்களேயாவர்.

தமிழகத்தில் மூவரசுகளும், வடபால் சிசுநாகர், நந்தர், மோரியர், குப்தர் ஆகியோரால் வளர்க்கப்பட்ட மகத அரசுமே தொல்பழங்கால இந்தியாவில் வேளிர் இணைவால் ஏற்பட்ட ஆதிகால முடியரசுகள் என்று கருத இடமுண்டு. ஏனெனில், தமிழ்ப் பேரரசரின் முற்கால இமயப் படை மயப் படையெடுப்புகளுக்கும், அதனையொட்டிப் புத்தர்கால அரசன் அசாத சத்துரு (கி.மு. 6ஆம் நூற்றாண்டு), மோரியர் (கி.மு.3ஆம் நூற்றாண்டு), சமுத்திரகுப்தன் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) ஆகியோரின் தமிழகப்