உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
76 ||

அப்பாத்துரையம் - 14



படையெடுப்புகளுக்கும் இம் மரபுப் போட்டியே வழிவகுத்தது என்னலாம். உண்மையில் வரலாற்றுக்கால முழுவதும் வட மேற்கு, மேற்கு இந்தியப் பரப்பு கொங்குநாட்டுத் தாயாதிச் சண்டையையே நினைவூட்டவல்ல பாரதப்போருக்கும் (அயலவர் படையெடுப்புகளுக்கும், அயலவர் ஆட்சிகளுக்கும்தான் ஆளானதேயன்றி, இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பரப்புகளைப் போன்று தேசிய அரசு பேரரசுப் போட்டிகளுக்கு உரியதாகப் பெரிதும் நிலவவில்லை! மூன்றாவதாக, தமிழல்லாத பிற இந்தியத்தாய் மொழிகள் மிகப்பலவும் உலகத்தாய்மொழிகள் கூட) இலக்கிய மொழிகளாக உருவாவதற்கு நெடுநாள் முன்பிருந்தே மதுரை மாநகர் வளர்த்த தமிழுடன் விதர்ப்ப நாடு வளர்த்த பாளி, பாகதம்,சமக்கிருதம் போன்ற அவ்வக்கால சமய இலக்கிய மொழிகள் அவ்வெல்லாத் துறைகளுக்குமுரிய தென்மொழியான தமிழுக்கு எதிரிடையாக வடமொழி எனத் தழைத்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது இதே மரபூழிக்குரிய செய்தியேயாகும்.

சங்ககால வேளிர் அனைவருமே தம் ஆட்சி மரபை வேள் என்றும் ஆட்சிக்குடி மரபினரை வேள்மான் (வேள்மகன்), அல்லது வேள்மாள் (வேள்மகள்) என்றுமே வழங்கினர். ஆயினும் அவர்களில் சிலர் வேள் என்ற இப்பொதுப் பெயருடனாக, கோ, ருங்கோ, கோமான் (கோமகன்) என்ற பட்டங்களையும், இன்னும் சிலர் அப்பொதுப் பெயருடனாக அல்லது பொதுப் பெயர், பட்டம் ஆகிய இரண்டினுடனாக ஆய் என்ற தனிப் பெயரையும் இணைத்துக்கொண்டனர். பாண்டிநாட்டுப் பகுதி யான நாஞ்சில்நாடு அல்லது வேள்நாடு ஆண்ட திருவாங்கூர் அரசர் கி.பி. 10ஆம் நூற்றாண்டு கடந்தும் ஆய்வேள் மரபினர் என்றே தமிழக வரலாற்றில் குறிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இம் மூன்று சொற்களில் கோ (அரசன்) என்ற சொல், அதன் விரிவுகளான கோன் (அரசன்), கோல் (அரசன் கைக்கோல், ஆட்சி, ஆட்சித் தன்மை) கோன்மை, (ஆட்சி, ஆட்சித்தன்மை) ஆகியவற்றுடனே குடியரசுக் காலம் கடந்த அம்மரபு மறக்கப் பட்ட பின்னும் முடியாட்சிக்குரிய அரசரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக நீடித்து வந்துள்ளது. ஆனால், ஆய் என்ற சொல்லோ, வேள் என்ற சொல்லோகூட, குடியரசுமரபு மறக்கப்பட்டுவிட்ட