உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

காண்கிறேன்.”

அப்பாத்துரையம் - 15

இந்தச் சாதிச் சந்தேகம் இராவ்பகதூர் வையாபுரி போன்றார் தலையிட்டால் அகன்று விடுவதாகப் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் கருதியுள்ளார்கள். தொடர்ந்து அவர் கூறுவது இதைக் காட்டுகிறது.

66

“ஆனால் இந்த இரு வகுப்பார் தவிர, மற்றும் பல வகுப்பார் களிலும் குற்றம் காண்பவரும் பெருமைப் படுத்துகிறவர்களும் காணப்படுகிறார்கள். ஆதலால் இக் கூற்றுக் குறுகிய நோக்கம் கொண்ட கூற்று என்றே கருதுகிறேன்!”

ஈர் ஆராய்ச்சி முடிவுகள்

வித்துவான் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் 1947இல் வெளியிட்ட தம் முதல் ஆராய்ச்சி நூலுக்குச் சிலப்பதிகார ஆராய்ச்சி என்ற பெயரே இட்டிருக்கிறார். அதற்கு ஆதாரங்கள் தந்த ஆராய்ச்சியாளரும் ஆதரித்து முன்னுரை தந்தவரும் இராவ்பகதூர் எஸ்.வையாபுரிப்பிள்ளை. இரண்டாவது சிறு வெளியீடு பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் ஆதரவு முன்னுரை யுடன் சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் என்ற பெயருடனே 1951-ல் வெளி வந்தது. இரண்டு நூல்களின் வாத முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

'சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்' என்ற நூலின் முடிவு வருமாறு.

'இதுகாறும் கூறியவற்றால் சிலப்பதிகாரம் திறக்குறளுக்கு இலக்கியமாகாது என்றும், அதில் தமிழ்ப் பண்பாடு இல்லை என்றும், சரித்திரப் பண்பாடு இல்லை என்றும், காவியப் பண்பாடு இல்லை என்றும் தடை விடைகளால் நிரூபித்துள்ளேன்.'

'சிலப்பதிகார ஆராய்ச்சி’ தந்த முடிவு வருமாறு:

"எனவே சிலப்பதிகாரம் சங்க காலத்திய நூலன்று.சரித்திர சம்பந்தமுடையதன்று. கற்பனைக் கதையாகும் என்பது தோற்றாமல் போகாது.

""

முன் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலில், காலம், வரலாற்றுப்