உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

99

பண்பு இரண்டுமே எதிர்க்கப்பட்டன. காவியப் பண்பு இழித்துரைக்கப்படவில்லை. பிந்திய நூலிலோ இதன் காவியப் பண்பு, தமிழ்ப் பண்பு மறுக்கப்படுகிறது. அஃது ஆரியப் பண்புடையது என்று இழித்துரைக்கப்படுகிறது.

பழிப்பவர் புகழ்ச்சி

முந்திய நூல் சிலம்பின் காவியப் பண்பைப் பழிக்கவில்லை. குறைகூறவில்லை. அது மட்டுமோ? போற்றும் உலகையும், போற்றும் இராவ்பகதூரையும் தாண்டி நூலின் காவியப் பண்புக்குச் சிறப்பளிக்கிறது.

66

"இந்நூல் மிக மிக அழகாக யாக்கப் பெற்றிருக்கிறது. எனவே, இதனாசிரியர் மிகச் சிறந்தவராதல் வேண்டும்.இவர்க்குத் தெரியாத கலைகள் இல்லை. எல்லாம் வல்லுநர், சர்வகலா வல்லவர், அல்லது 96 வகை சாத்திரங்களிலும் வல்லவர் எனில் மிகப் பொருந்தும். மனோபாவத்தில் தோன்றிய கதையை மிகத் திறம்பட உரைத்து மெய்யாக்கியது ஆசிரியரின் வன்மையைத் தோற்று விக்கின்றதன்றோ?" (பக். 21)

"ஒவ்வொரு பகுதியிலும் இலக்கியச் சுவை ததும்ப நின் றதென்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்." (பக்.32)

66

'இந் நூலில் ஆசிரியர் காவிரி, கையாகிய ஆறுகளையும், புகார், மதுரை ஆகிய நகரங்களையும், சூரிய சந்திரர் உதயமும் அஸ்தமனமும், கொண்டற் காற்று, குடகாற்று, வாடைக் காற்று, தென்றல் என்ற நால்வகைக் காற்றுகளையும், இந்நகரங்களைச் சூழ்ந்துள்ள காடுகளையும் வருணிப்பது படிப்போருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நேரில் தோன்றும் தோற்றம் போலக் காணப்படும். எந்த நூலாசிரியனும் ஒருங்கே கூறாத பல செய்திகளையும் இவர் கூறுகின்றார். இவரால் கூத்து வகைகள், இசை வகைகள், யாழ் வகைகள், பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, பறவைகளின் ஒலி, கோள்மீன், நாண்மீன் இவற்றின் நிலைகளாலும் திரிதலாலும் உலகுக்கு ஏற்படும் நன்மை தீமைகள், மருந்து முறைகள், பல சமயங்களின் செய்திகள், பல புராணக் கதைகள், அரசர் பலர் செய்தி, மலைகள், தெய்வங்கள் இன்னோரன்ன கூறப்பட்டிருக்கின்றன.” (பக். 31-32)

பல