உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(102

|– –

அப்பாத்துரையம் - 15

மறுபுறமும் வெறும் கருத்து வேறுபாடு மட்டும் உடையவர்கள் அல்லர்; தமிழகத்தில் பிறந்த இரண்டு உயிர்கள் என்ற பொது ஒற்றுமை தவிர வேறு எல்லா வகையிலும் அவர்கள் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள்.

இருவரும் ஒற்றுமைப்படுவதற்குரிய பொதுப் பண்பும் எதுவும் கிடையாது; வேற்றுமைப்படுவதற்குரிய பொது நோக்கமும் எதுவும் கிடையாது. ஆயினும், இப்பொருந்தாத் தலைகள் இரண்டுக்கும் இடையே நின்று பொருத்தம் காண முயலுகிறார் பேராசிரியர்.

இது மட்டுமன்று, இரு குழுவிலும் இடம்பெற்ற பேராசிரியர் இரு குழுவிற்கும் பிரதிநிதியாக நின்று இருவேறு வகைப்பட்ட சிலப்பதிகார எதிர்ப்பு நூல்களை இயற்றித் தந்துள்ளார். 1947-ல் இராவ்சாகிப் அவர்கள் முன்னுரை, மேற்கோள்களுடன் ஆனந்தபோதினி பத்திராதிபர் திரு.நா.முனுசாமி முதலியார் அவர்களைப் பிரசுரகர்த்தராகக் கொண்டு வெளிவந்த 'சிலப்பதிகார ஆராய்ச்சி' என்ற நூல் புறக்கணிப்புக் குழுவின் கருத்தையே மேற்கொண்டது. சிலப்பதிகாரம் சங்க காலத்து நூலன்று, பிற்பட்டது; அது வரலாற்று நூலன்று, கற்பனைக் காவியம் என்று மட்டுமே அது வாதாடிற்று. அதன் அழகை, பெருமையை, பண்பை, ராவ்சாகிப் அவர்கள் வலிவுறுத்தியதுபோலவே அதுவும் வலியுறுத்திற்று. ஆனால், 1951-ல் பெரியார் ஈ.வே.ரா.அவர்களின் முன்னுரையோடு 'சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்' என்ற தலைப்புடன் திராவிட இயக்கப் போர்வையில், அவ்வியக்கத்தாரின் அறிவு நூல், கலை நூல் கொத்து களிடையே ஓர் அறிவுக் கலை ஆராய்ச்சி நூல் போல மாறுவேடத்துடன் வெளி வந்த நூல் தூற்றல் குழுவின் சார்பானது. பெரியார் ஈ.வே.ராவின் முன்னுரை எடுத்துக் காட்டுகிறபடி சிலப்பதிகாரத்தில் இலக்கியப் பண்பு, சரித்திரப் பண்பு, தமிழ்ப் பண்பு ஆகிய நால்வகைப் பண்புகளுள் எதுவும் இல்லை என்றே அது வாதாட முயல்கின்றது. இவ்வாதமும், இம்முடிவும் பேராசிரியரே எழுதிய முந்திய நூலின் முடிவுகளிலிருந்து வேறுபட்டவை மட்டுமன்று, அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவையுமாகும்.