உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

113

சிலப்பதிகார வரலாற்றுச் செய்திகள், வரலாற்றுச் செய்தி களல்லவானால் அவை, திறமை வாய்ந்த கற்பனைகள் மட்டுமல்ல, வரலாற்றுக்கு மாறான பொய் வரலாறு ஆகிவிடும். வேண்டு மென்றே வரலாற்றை மறைப்பதற்காகப் புனைந்துருவாக்கப் பெற்ற வஞ்சகத் திரை ஆகிவிடும். மேலும், அஃது ஆரியப் பண்பாட்டைக் குறிக்கொண்ட கம்பராமா யணத்துக்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டைக் குறிக்கொண்ட ஏடாக அமையாது.கம்ப ராமாயணத்தைப் போலவே கற்பனைப் புளுகை மொழிபெயர்த்த போலிக் கற்பனைப் புளுகாகி விடும்.

இராவ்பகதூரின் சிந்தனைத் திறன் அவர் எதிரிகள் பலராலும் எளிதில் அறியப்படாதது. ஏனெனில், அவர் ஆராய்ச்சிகளையோ புலமையையோ ஏற்காத, திரும்பிப் பாராத தமிழ்ப்புலவர் உலகிலேகூட அது பல பிளவுகளையும் குழப்பங் களையும் உண்டுபண்ண முடிந்திருக்கிறது. சங்க இலக்கிய ஆர்வப் புலவரிடையே தத்தம் உள்ளார்ந்த ஆர்வங்களுக்கேற்ப அது பல ஆராயா நம்பிக்கைகளை வளர்க்கவும் உதவியுள்ளது. சிலப்பதி காரம் சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூலாயிருக்கக் கூடும் என்று சிலரும், அது சங்க காலத்திய ஏடாயிருந்தாலும்கூட, சங்க காலத்திறுதிக்குரியதாகவேனும் இருத்தல்வேண்டும் என்று சிலரும் கொள்கின்றனர். இக்கருத்துகள் ஆராய்ச்சிகளல்ல, ஆராய்ச்சிகளைத் தூண்டுபவையுமல்ல! ஆராயா முடிவு களாகவே நின்று, மேல் ஆராய்ச்சிகளைத் தடை செய்பவையே ஆகும். மற்றொருபுறம் ஆரிய எதிர்ப்பாளர், திராவிட இயக்கத்த வரிடையே, தாம் விரும்பாத ஆரியக் கருத்துகளையும், ஆரியம் என்று தாம் நினைக்கும் கருத்துகளையும் பிற்காலத்திய ஆரியத் தொடர்புக் குரியன என்று ஒதுக்குவதற்கு அது தூண்டுதல் தருவதாயிற்று.

ன்

இத்தகைய பல திசை ஆர்வ முடிவுகளின் குளறுபடி களுக்கிடையே, சிலப்பதிகாரம் பழந்தமிழகப் பண்பாடுகளின் ஒரு பலகணி என்பதும், அது சங்க இலக்கியம், திருக்குறள், தொல்காப்பியம் பெருங்கதை ஆகியவற்றுடன் ஒப்பாக மறைந்த உலக நாகரிக மரபுகளை உயிர்ப்பித்துக் காண உதவும் ஓர் அருங்கருவி என்பதும் மறக்கப்பட்டுவிட்டன, மறக்கப்பட்டு வருகின்றன. அதன் ‘முத்தமிழ் மரபு' புலவர்களின் மாயச்