உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 15

116 | இங்கே தம் குழியில் தாமே விழுபவர்கள் திராவிடப் பற்று அல்லது தனித்தமிழ்ப் பற்றுக்கொண்டவர்களே. அவர்கள் முதலில் விரும்பாததை எல்லாம் ஆரியம் என்று தூற்றி, பின் ஆரியம் என்பதற்காகவே வெறுத்தொதுக்கி அவற்றை ஆரியர்க்கே உரிமையாக்கிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்கள் மறைமுகமான, ஆனால், முதல்தரமான ஆரியப் பிரச்சாரம் செய்துவிடுகின்றனர். அவர்கள் சான்று எதிரியின் சான்றாதலால், அது பிழைபட்ட வாதமானாலும் வலிமை வாய்ந்த தருக்கம் ஆகிவிடுகிறது!

ரு

இரு சாரார் முடிவுகளும் தவறு என்பதைத் திறந்த உள்ளமுடையவர் காண்பது எளிது. ஏனெனில், இங்கே இரு திசைகளிலும் வாத முறையே தவறு. எப்படியெனில், சமயச்சார்பு காணப்படுவதனால் திருமுருகாற்றுப்படை சிறிது பிற்பட்டது என்று கொள்ளலாமானால், பிற்காலப் புராணங்களில் கூட மிகவும் பிற்பட்ட கந்தபுராணம், பாகவத புராணம் ஆகியவற்றின் கருத்துகள் பரிபாடலில் காணப்படுவதனால் அவை மிக மிகப் பிற்பட்டவை, கம்பராமாயணக் காலத்தவை என்று கூற வேண்டிவரும்.

பிற்பட்ட புராணக் கருத்துகளுக்குத் தமிழ்ச் சங்க மரபுரைகளும், மக்கள் வாய் மரபுகளுமே மூல முதலாகும் என்பதைப் பல வரலாற்று ஆராயச்சியாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். திருத்தந்தை ஹீராஸ் புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் உரிய மூல மரபுகள் ஆரியர்க்கு முற்பட்ட தமிழினம் சார்ந்தவை என்று விளக்கியுள்ளார்.